28/11/2012

நண்பேண்டா-ஒரு காதல் கதை


(இது  ஒரு கற்பனைக்கதையே ஆகும்.யார் மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல.சிரிக்கவைத்து  உங்கள் வயிற்றை புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது)


”இப்பிடித்தான் கபிலன் எண்டு ஒரு பயல் மானிப்பாய்ல இருந்தான்.அவன் ஏ.எல் படிக்கிற டைம் 2008 ஆம் ஆண்டு இருக்கும் பையன் ஐஸ்வர்யா எண்ட பொண்ண லவ்விட்டு இருந்தான்.பஸ்ஸில ஸ்கூல்லுக்கு போற டைம் இவண்ட ஹீரோயிசத்துக்கு அளவே இல்ல.பஸ் புட்போல்ட  பிரன்ஸோட தொங்கிட்டு  கைவலிக்க இவன் என்ன செய்வான் எண்டா யன்னல் வழியா ஐஸுவ லுக்குவிட்டபடி “வழையோசை கல கலவென” பாடலை கேவலமா ஹம் பண்ணிட்டு இருப்பான்.முதலில் ஒன் சைட்டா இருந்த லவ் அப்புறம் டூ சைட் ஆகி இவங்க ரெண்டு பேரோட போறவங்க,வாறவங்க சூசைட் பண்ணாத குறையா லவ் பண்ணினாங்கள்.


அப்ப தான் ஒரு ஹேப்பியான சம்பவம் நடந்துச்சு.ஒரு லவ்லீ டே தன்னோட பாங்கர் அப்பாக்கு ட்ரான்சராகினபடியாலா  ஐஸ்வர்யா கபிலனுக்கு டாட்டா காட்டிட்டு அவங்க  குடும்பத்தோட கொழும்புக்கு போய்ட்டு.போற டைம் அண்ணனுக்கும் ஐஸ்ஸுக்கும் சின்ன ஊடல்கள்.பி காஸ் அண்ணன் பார்க்க ஸ்டைலா இருந்தாலும் மொக்கைதனமா பேசுவான்.குரங்குச்சேட்டைகள் எண்டா அவ்வளவு பிரியம் அவனுக்கு.கடசி டைம்ல இவண்ட  குரங்குத்தனமான பேச்சை எண்ணி.  ஐஸ் ரெம்ப கவலையா இருக்கும்  ரெம்ப நேர திங்கிங்கு பிறகு ஐஸு ஒரு முடிவுக்கு வந்துது.இவனோட இருந்தா சரிவராது.பேசாம அண்ணன கழட்டி விடுவம். எண்டுட்டு போன் நம்பர் எல்லாத்தையும் மாத்திட்டு நிம்மதியா கொழும்பில வாழ்ந்து வந்துச்சு.

அண்ணன்(கபிலன்)  ஐஸு பிரிஞ்சத எண்ணி ஒரே சோக பாட்டு கேக்க தொடங்கினான்.”ஊர் சண்டைல ஊறுகாய் நக்கும்”நிகழ்ச்ச்சிகளில தனது சோககதைகள போன் பண்ணி சொன்னான்.இத எல்லாம் கேட்டு ஐஸு தனக்கு கிடைப்பாள் எண்டு முரட்டு தனமா நம்பினான்.இரவு குரூப் ஸ்ரடி எண்டு தண்ட பிரண்ஸ வீட்ட கூப்பிட்டு அவங்கட காதால ரத்தம் வாற அளவுக்கு சோககதைகளயும் மொக்கை கவிதைகளையும் சொல்லி சாவடித்தான்.ஏ.எல்லும் வந்துச்சு எதிர்பார்த்தபடியே ரிசல்ஸும் கேவலமா வந்துச்சு.கொஞ்ச காலம் போக அண்ணனும் ஐஸுவ மறந்துட்டு மானிப்பாய் சந்தி,பிரபல ரியூசன் வாசல்களில் எளிமை இசை இயக்கம் ஆற்றதொடங்கினார். ஆனா ஒரு துண்டும் சிக்கல்ல.இப்டியே ஒரு பொண்ணு பார்த்து சிரிக்கும் அப்புறம் பிரன்ஸ்கிட்ட கேட்ட அது எல்லாரையும் பார்த்து சிரிக்குது மச்சி எண்டு சொல்ல அண்ணன் சோகமாகுறதும் நாளும் பொழுதும் நடந்துச்சு.


இதுக்கிடைல அண்ணன் ஐஸுவ முழுசா மறந்துட்டார். ஜாலியா லைஃப என்சாய் பண்ணிட்டு கண்டினியூ பண்ற டைம் தான் “விண்ணைத்தாண்டி வருவாயா” படம் வந்துச்சு.
அந்த படம் பார்த்து ”மச்சி என்னோட கதைடா” எண்டு சொல்லாத ஆக்களே இல்லை எண்டு சொல்லலாம்.ஏன் எண்டா  அவன் கூட சேர்ந்த எல்லா பயலுகளுக்கும் லவ் ஃபெய்லீயர். ஆனா அண்ணனுக்கு கொஞ்சம் ஸ்பெசல் செட் ஆகி அப்புறம் ஃபெய்லீயர் ஆனதால படம் ரெம்பவே பாதிச்சுட்டுது.பழைய லவ் மெமரீஸ தூசு தட்டி எழுப்பி டான்ஸ்வேற ஆட்வச்சுது. அண்ணன் படத்ல வர்ர சிம்பு போல தன்னை இமாஜீன் பண்ணிட்டு கொழும்புக்கு ஐஸுவ தேடிபோக ரெடி ஆனார்.இவன் கூட இருக்கிற பிரண்ஸும் நல்லா உசுப்பிவிட்டங்க.”மச்சி வெள்ளவத்த சின்ன இடம் நாலு கோயில் 10 ரியூசன் 15 உடுப்புகடை இதுக்க மாறிமாறி ஏறி இறங்கினா அங்க எங்கயாச்சும் தான் ஐஸு இருப்பா போ மச்சி வெற்றியோட திரும்பிவா ”எண்டு சொல்லி வழி அனுப்பிவைச்சாங்க.

அந்த டைம் இவண்ட அப்பா&அம்மா இந்தியா போயிருந்திச்சினம்.வீட்டில மானிப்பாயே முழுசா தெரியாத அவண்ட அப்பாவி அப்பப்பா தான் இவனோட இருந்தார்.இவன் நைஸா ”அப்பப்பா தெகிவள சூக்கு பிரண்சேட போகப்போறன் சூ முழுசா சுத்தி முடிக்க ஒரு கிழமை ஆகும்.கட்டாயம் போகோணும் கெமிஸ்ட்ரி பாடமும் அதில சம்பந்தபடுது ”எண்டு பொய் சொல்லி காசுவாங்கிட்டு பிரயாணமானான். கொழும்பு வந்து இறங்கினபோது தான் ஒண்டு நினைவுக்கு வந்துது.ஐஸ்ஸுக்கு டான்ஸ் எண்டா உசிர் எண்டு பேசேக்கையே இமைய அசைச்சு கைவிரல்கள குவித்து விரித்து பேசுவா எப்டியோ உங்க வந்தும் டான்ஸ் பழகுவாள் எண்ட ஊகத்தில டான்ஸ் கிளாஸ் நடக்கிற இடமா தேடி போய் 2 நாளுக்கு பிறகு ஒரு சந்தில ஐஸுவ கண்டுட்டான்.அப்புறம் என்ன ஐஸு அப்டியே ஷாக் ஆகி நிக்க அண்ணன் ”ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே” எண்டு ஹம் பண்ண ஒரு கேவலமான ரெமான்ஸே ரெண்டு நிமிசம் போய்கொண்டு இருந்துச்சு.இவன கண்டதும் ஐஸூ தெரியாதவள் போல நழுவி போக பாக்க அண்ணன் தாங்கள் லெளகீக நாட்களில் இருந்த லவ் லெட்டர்ஸ காட்டி ஐஸுவுக்கு ஷாக் கொடுத்தான்.

”உலகத்திலயே பாக்ககூடாது எண்டு நினைச்ச மொக்க படத்த லோங் ட்ரிப் பஸ்ல போகும் போது  பாக்கேக்க எப்டி ஒரு பீல் வருமோ அப்டி இருந்துச்சு” ஐஸுக்கு.கொஞ்சநேரம் சுதாகரிச்சுப் போட்டு சொன்னா” இங்க பாரும்  எனக்கு செட் ஆயிட்டு.ஒரு ஆள் இருக்கிறார்.கொழும்பில தான் இருக்கிறார். 2 வருச லவ்.உம்மள போல இல்ல அவர் நல்லா பேசுவார்.அவர தான் கலியாணம் செய்யபோறன்.பழைய கதைகள பேசி நேரமில்ல.எது வேணும் எண்டாலும் அவரோட கதையும் இந்தாரும் அவரோட போன் நம்பர் ”எண்டுட்டு சட்டு புட்டு எண்டு பேசிட்டு ஐஸு போயிட்டு.அந்த டைம் பார்த்து மழைவேற வந்துட்டு.அண்ணனிட்ட குடை இருந்துச்சு ஆனா பிடிக்கல்ல.பீல் பண்றதுக்காக மழைல நனைஞ்சுட்டே சோகம ரூமுக்கு கிழம்பினார்.

அங்க இருந்து வடிவா அழுது முடிச்சுட்டு.வழமையா பெடியங்கள் பண்றபோல தண்ட சோகத்த பிரண்ஸுக்கு சொல்லி புலம்பினான்.இவங்க சும்மா இருந்தாங்களா?மச்சி கவலபடாதடா அவண்டா போன் நம்பர் இருக்கு தானே அவனோட போய் கதைடா என்ன பிரச்சனை வந்தாலும் நாங்க இருக்கிறமடா.கொழும்பில என்னோட நேர்சரில படிச்ச இரோசன் ஏரியா ரவுடியா இருக்கான் என்ன பிரச்சனை எண்டாலும் அவன் வருவான். நீ போய் கதை மச்சி எண்டு உணர்ச்சி வசப்பட்டு பேச அண்ணன் கண் சிவந்து ஆக்ரோசத்தோட புறப்பட்டார்.

கபிலன் ஐஸுவோட பிரசண்ட் லவ்வருக்கு கோல் பண்ணினான். அவனும் தன்மையா கதைச்சான்.
கொஞ்சநேரம் பேசினதுக்கு பிறகு நல்லதா நடக்கோணும் எண்டு வேண்டிட்டு அவன சந்திக்கிறதுக்கு வெளிக்கிட்டு பம்பலப்பிட்டி கோயிலடிக்கு போனான் .அங்க இருந்து கோல் பண்ண ”ப்ரதர் எங்க நிக்கிறீங்க நான் பச்சை சேட்டும் சிவப்பு ரவுசரும் போட்டுட்டு கோல் ரோட்டில நிக்கிறன்”எண்டான்.”ஓகே பக்கதில ஒரு ஒழுங்கை இருக்கு அங்க வாங்கோ” எண்டு சொல்ல போனான் கபிலன்.”நேர போய் வலப்பக்கம் திரும்ப ஒரு ஜிம் வரும் அங்க வாங்கோ” எண்டு சொல் வயித்த கலக்க தொடங்கிட்டு.எண்டாலும் அடக்கிப்போட்டு போனான்.

அங்க சிக்ஸ்பேக் ஓட ஒரு உருவம் இவன் முன்னால வந்து நிண்டுச்சு நான் தான் நீங்க தேடின ஆள் என்ன விசயம் எண்டு கேக்க இவன் “எல்லா விசயத்தையும் உளறிக்கொட்டிட்டு.ஐஸுவ நான் லவ் பண்றன் அவள் எனக்கு தந்த லவ் லெட்டர்,கிரீட்டிங்ஸ் இருக்கு.நீங்க அவள விட்ட்ட்ட்ட்ட்ட் ட்ட்ட்ட்ட்டூடுடுடுடு. ....................... ”என்று சொல்லி முடிக்கிறதுக்கிடைல சபேசனுக்கு எல்லாம் ஒரே இருட்டா போச்சுது.ரவுசரும் ஈரமாகிட்டுது.மூக்கு கொஞ்சம் உடைஞ்சும்,ரெண்டு பல்லு மட்டும் விழுந்தும்,கன்னம் கொஞ்சம் வீங்கியும் குருதிப்புனல் கமல்ஹாசன் போல ஒரே ஓட்டமா யாழ்பாணம் வந்து சேர்ந்துட்டான்.அதே கேவலாமா கெட் அப்ல ஊருக்கு வந்ததும் இல்லாம தண்ட மொக்க பிரண்ஸ கூப்பிட்டு மீட்டிங் போட்டு தண்ட கதைய சொல்லி கிளைமாக்ஸ் சொல்லி முடிக்க எல்லார்ட கண்ணிலயும் மரணபீதி. அதுல தான் ரெண்டு குத்துவிட்டதாயும் அவன் ஆக்களோட அடிச்சதால தான் சமாளிக்கேலாம போச்சு எண்டும் சொல்லி பிட்டுகளும் போட்டான். ஒரு நிமிசம் எல்லாம் மயான அமைதி.கபிலன்  மீண்டும் பேசத்தொடங்கினான் “மச்சி என்ன பண்ணலாம் மச்சி சொல்லுங்கடா அவன என்ன பண்ணாலாம்?.ஐஸூவ என்ன பண்ணலாம்?.அசிங்கமாப்போச்சுடா ”எண்டு இதுவரைக்கும் அசிங்கப்படதவன் போல சொன்னான்.சில நிமிட அமைதி.

கொஞ்சம் உரத்த குரலிலமீண்டும் ”மச்சி ஏண்டா பேசாம இருக்குறீங்க என்ன பண்ணலாம் சொல்லுங்கடா? நான் என்ன பண்ண இப்ப?” எண்டு கேட்டான்.

எல்லாரும் முகத்தை கீழ வைச்சுக்கொண்டு ஒருத்தரஒருத்தர் முழிச்சு பார்த்துட்டு
அமைதியான  கோரஸா  “வா மச்சான் மருந்தெடுப்பம்”

எண்டு சொல்லிட்டு சத்தமில்லாமல் குனிஞ்சபடியே மெதுவாக கிளம்பினார்கள்.


                                                              முற்றும்

****************************************************************


இந்த கதைல என்ன மெசேஜ் இருக்கு எண்டு கேக்குறது என்னோட ஏழாம் அறிவுக்கு விளங்குது நாங்க இவ்வளவு நாளா பட்ட அனுபவத்த வச்சு சொல்லுறன் கேளுங்க.1.காதலை பொறுத்தவரை மிகச்சிறந்த உளவியல் விசயம் என்ன எண்டா அதன் போக்கிலே விட்டுவிடு என்கிறது தான் ஒரு பொண்ணு நம்மள தேடி நமக்கு ஏத்தமாரி வந்துச்சா செட் ஆக்கி வைச்சுக் கொள்ளணும். அதே பொண்ணு போச்சுதா அப்டியே விட்டுடணும்.மேல புதுசா ட்ரை பண்ணினால் குருதிபுனல் கமலும்,சேது விகரமும் தான் மிஞ்சும்.

2.ரெண்டாவது இந்த பொடியங்கள் கெடுறதுக்கு முக்கியகாரணம் இந்த காதல் படங்கள்.அந்த படத்தில வாற கதையை தங்கட கதை எண்டும் என்ன தான் இவங்க மொக்கையா இருந்தாலும் பட்த்தில வாற  ஹீரோவா தன்னையும் ஹீரோயினாய் தண்ட பிகரையும் நினைச்சுகொள்ளுறது.அதுக்கபிறகு பட்த்திலவாறமாரி லாஜிக்கே இல்லாம அப்ரோச் பண்றது.ஒண்டு சொல்லுறன் இந்த படங்கள் எல்லாருக்கும் பிடிக்கோணும் எண்ட்துக்காக எழுதுறது. ஆனா நாங்க பண்ற காதல் நாங்க லவ் பண்ற பொண்ணுக்கு பிடிக்கணும்.அதன் வழில தான் போகோணும்.சோ உங்கள் ஹீரோவா நினைக்கிறத விட்டுத்தள்ளுங்க.

3.இன்னும் நிறைய இருக்கு அதுல ரெம்ப அலேர்ட்டா இருக்கவேண்டிய  ஒண்டு ஆனா இது தான் முக்கியமான மாட்டர் சொல்லப்போறன்.அவங்க தான் இந்த நண்பர்கள்.ஒரு பொண்ணோட சாதாரண பார்வையை காதல் எண்டி நாங்க நினைக்க காரணம் இந்த பிரண்ஸ் தான்.உசுப்பியே லவ் பண்ண வைச்சுடுவாங்க.ஐஸ்வர்யா என்ன ஐஸ்வர்யா ராய் கூட வந்தாலே மச்சி உனக்கு அணையும்டா நான் இருக்கன் எண்டுவாங்க.முக்கியமான டைம் வர்றப்போ மச்சி கொஞ்சம் பிரச்சனை தாண்டா அவள்.வேற ஆள பாருடா எண்டு சொல்லி இன்னொரு குழிக்குள்ள தள்ளிவிடபாப்பாங்க.காதல் என்ற விசயத்தில நண்பர்கள் எப்போது பாசிட்டிவா தான் பேசுவாங்க.சோ அதெல்லாம் உண்மை எண்டு நினைச்சு மாதவன் ரேஞ்சில டயலக் விட்டு செருப்படி வாங்குறத தவிர்த்து கொள்ளுங்க நண்பர்களே.

சரி ஏதோ நிறைய பேசுறானே ரெம்பவே அடிபட்டு இருப்பான் எண்டு நீங்க ஜோசிப்பீங்க.அதான் முன்னமே சொல்லி இருக்கிறன் எல்லாம் கற்பனை எண்டு.தேவையில்லாதத குழப்பிக்கொள்ளாம நல்ல பொண்ணா பிடியுங்கள் நலமாக வாழுங்கள்.பெண்களுக்கு இத சொல்லிக்கொள்ளுறன்.

இவன் இடியட் இரோஷ்


10/11/2012

சைக்கிள் திருடன்... Based on a true story


 (இந்த கதை ஏற்கனவே என் பேஸ்புக்கில் பகிர்ந்தது.  இங்கு பகிர்கிறேன்)


திகதி-2012.06.11
நேரம்-9.30AM
இடம்-என் வீடு


”டாய்  எழுபம்படா சோம்பேறி உண்ட வயசு பெடியள் இப்ப எழும்பிவேலை எண்டு போயிருப்பாங்கள்  9.30க்கு பிறகும் படுத்து இருக்கியே நீயெல்லாம் என்ன செய்யபோறியோ” என்று அம்மாட வழமையான   சுப்ரபாதம் ஒலித்துகொண்டு இருக்க.. வழமை போல கேட்காத மாரி நடிச்சுக்கொண்டே தூங்கிகொண்டிருந்தன்... அப்புறம் ஏதோ புது டயலக் வேற சேர்த்து  “இப்பிடி தான் ஒருத்தன் எப்பவும் தூங்கிட்டு இருக்கான் எண்டு டைவேர்ஸ் ஆகிட்டாம் அத போல தா.......................................” எண்டு அம்மா சொன்னவுடன் யாரோ மண்டைல டங்னு அடிச்ச மாரி இருந்துச்சு(என்ன இருந்தாலும் பியூச்சர் முக்கியமில்லோ)  உடன எழும்பி 10.00 மணிக்கு ஆயத்தமாயிட்டன். 
எதுக்கெண்டா கேக்குறீங்க ............. ஊர் சுத்த தான்......

சரி எண்டு இருக்கிற  சைக்கிள் எல்லாம் பார்த்தன் காத்து இல்ல ஒட்டு(பஞ்சர்) வேற அப்ப தான் நண்பன் குமாரு சொன்னது நினைவுக்கு வந்துச்சு என்னவா சொல்றன்”மச்சான் ஓவரா எல்லாரையும் கலாய்க்காதடா
இப்பிடி பண்ணினா சைக்கிள் அடிக்கடி காத்து போகும் இல்ல ஒட்டு வரும்”.....பட் அது ஒரு வகைல உண்மையாயும் இருக்கலாம்..சோ பீ கெயார் புல் பிரண்ஸ்........சரின்னு இருந்த ஒரு லேடீஸ் சைக்கிள எடுத்தன் அது எண்ட சொந்த காசில  வாங்கினது(”எங்க ஆட்டைய போட்டனீ ”ம்ம்ம் விளங்குது உங்க மைண்ட் வாய்ஸ்)  நொந்து நூலாகி ஒரு ஓரமா படுத்துகிடந்தத எடுத்தன். பார்த்தா எண்ட கடசி தம்பி ஒரு கடசி வேல பார்த்து இருந்தான்.....சைக்கிள் பாஸ்கட்டையும் சில்லையும் ஒரு வெள்ள  நூலால கட்டி இருந்தான். கடுப்பாகி கஸ்ரப்பட்டு நூல அறுத்துட்டன்...(கஷ்ரப்பட்டு எண்டது எண்ட உயிர் பிரன்ஸுக்கு விளங்கும்)இருந்தாலும் கொஞ்ச நூல் தொங்கிட்டு இருந்துச்சு அறுக்க பஞ்சியில அப்டியே விட்டுட்டன்...அப்ப தான் ஞாபகம் வந்துச்சு ”மகாபொல ஸ்காலர்சிப் செக்”  7500.00 இன்னும் பாங்ல மாத்தல எடுத்துட்டு எண்ட ஓட்டை பல்சர ஸ்ராட் பண்ணினன்..

யாழ்ப்பாண ரோட்டில ஒருத்தன் ஒவ்வொரு நாளும்  சைக்கிள் உழக்கினா வாழ்க்கைல அவனுக்கு கல்யாணம் காட்சி நடக்காது சோ பீ கெயர் புல் எண்டு நினைச்சுக்கொண்டே பாங்க்குக்கு அருகில பார்க் பண்ணினன்.....அப்ப தான் என்ன பண்ணலாம் 7500.00 வரப்போகுது நாலஞ்சு பில் கட்டணும்  வேற மிச்ச காசுக்கு வழமை போல ஏதும் பாடம் படிப்பு சம்பந்தமான கல்வி அறிவியல் சம்பந்தமான  புத்தகங்கள் கொப்பிகள் பாட நூல்கள் வாங்கலாம்னு(ஆ ஆஆ அழக்கூடாது பிரண்ஸ்)  நினைச்சு உள்ள போனன்.ஒரு மாரி கவுண்டர தேடி கண்டுபுடிச்சு செக்க மாத்த போக ஒரு ஆண்டி வந்து கேட்டா இங்க காசு போடலாமேன்னு எனக்கு ஒரே புழுகம் ”ஓம் அன்ரி” எண்டு சொல்லி பெருமை பட்டன்(நான் கண்டுபுடிச்சதே செக்கியூரிட்டிட்ட கேட்டுதான் எண்டது அவவுக்கு தெரியாது லொல்) .. தெரியாது எண்டு ஒண்ட யாரும் கேட்க நாங்கள் அத பத்தி சொல்லறப்போ ஒரே புழுகமாதான் இருக்கும்...ஹி ஹி ஹி....காசு மாத்தியாச்சு கவுண்டரில நல்ல வடிவான ஒரு “அக்கா” இருந்தா.(எல்லாப்பொண்ணுங்களும் எனக்கு அக்கா தங்கச்சிமாரின்னு ஆல்ரெடி சொல்லி இருக்கன்”)..என்ன தான் ட்ரை பண்ணாலும் பாங்ல சேரஏலாது(பி காஸ் வீட்லயே சேர்க்கிறாங்க இல்ல) என்ன நானே நொந்துகொண்டு வெளில வந்தன் அப்ப தான் அப்ப தான் அப்ப.......தான்..........ஒரு அதிர்ச்சி காத்து இருந்துச்சு.........................என்ன அதிர்ச்சிஎண்டா சொல்றன் அடுத்த பந்திக்கு வாங்க....

அது அந்த ரோட்டு கரைல பார்க் பண்ணி இருந்த எண்ட பல்சர காணல (லேடீஸ் பைக்னும் சொல்லலாம் அத)...மண்டையெல்லாம் விறைச்சு போச்சு...... “அந்த பீலிங் எப்டின்னா.................................
”நம்மள ஒரு பொண்ணு பார்த்து சிரிக்க அற் த டைம் அவ அப்பன்காரன் வருவானே அப்ப எப்டி இருக்கும்??
”“கடசி வாங்கில இருகிறப்போ தேடி புடிச்சு வாத்தியார் கேள்வி கேப்பாரே அப்ப எப்டி இருக்கும்”
“தியேட்டரில மொக்க படம் பார்க்கிறப்போ முன்னால இருக்கும் கப்பில்ஸ பார்க்கிரப்போ எப்டி இருக்கும்”
அப்டி இருந்துச்சு.................(கூல்..............)அப்ப எண்ட மனசில என்ன தோணிச்சு எண்டா...........
“அட கடவுளே கைல 7500 தந்துட்டு 7500ஆ வேற மாரி புடுங்க்கிட்டியே””.
ஒரு சபாரி அதான் நுளப்பு மோட்டர் பைக் துலைச்சு இப்ப தானே 4 மாசம் ஒரு வருசத்துக்கு முன்னால தானே 2 சைக்கிள் துலைச்சன் வீட்ட போனா சங்கு தான் பேசாம  நண்பன் கொமாரு பேஸ்புக்க்ல போடுற மொக்க காதல் தோல்வி கவிதகள  வாசிச்சுட்டு சாகாலாம்னு தோணிச்சு..”ஆனா ஒரு நிமிசம் சிந்திச்சன் ஏன் தேவல்லாமா கொமார கொல கேஸ்ல மாட்டுவான்னு நினைச்சு மனச தேத்திக்கொண்டன்.


”நம்ம சைட் அடிக்கிற பொண்ணுக்கு பேஸ்புக்ல மெசேஜ் பண்ணிட்டு  ரீப்லேய பார்த்துட்டு இருக்கிறமாரி” யாராச்சும் திருப்பி கொண்டுவந்து தரமாட்டாங்களா என் அஞ்சலய எண்டு ரோட்ட பார்த்துட்டு இருந்தன்....
அப்ப ஒரு மெடிக்கல் மிராக்கில் நடந்துச்சு.அரை குறையா அறுக்காம விட்ட அதே நூலோட ஒரு சில்லு சுத்திட்டு போகுது எனக்கு முன்னால மெதுவா நிமிர்ந்து பார்த்தா எண்ட சைக்கிள் ஒரே ஹாப்பி...
பெஸ்ட் டைம் கள்ளன புடிக்கபோறன்னு தான்.........துரத்திட்டு கூட போகல நடந்துபோயே வழிமறிச்சன் அவ்ளோ சிலோவா ஓடிட்டு போனார் அந்த கள்ளன் எண்டு நான்  நினைச்ச அந்த மனிதர்.....உடன இறங்கிட்டார் ஒரு 70 வயசுஇருக்கும் எனக்கு சிரிப்புவேற வந்துட்டு “ஐயா இது எண்ட சைக்கிள்”எண்டன்...........

அதுக்கு அந்தமனிசன் ஒண்டுமே நடக்காதது போல கீழ குனிஞ்சு பார்த்தார்(சைக்கிள் பெடலை) பின் கரியலை பார்த்தார் பெல் அடிச்சு பார்த்தார்.
 “ஓம் தம்பி எடுக்கேக்கயே நினச்சன் பேக் சைட்ல புதுசா இருக்கிறபோலவே   இருந்துச்சு” “ தம்பி எண்ட பேர்த்தின்ர சைக்கிள கொண்டுவந்தன் அதுதான் இது எண்டு நினைச்சு எடுத்துட்டன் ஓடேக்கயே ஒருமாரி தான் கிடந்துச்சு..அந்த கரைல நிக்குது அது தான் சைக்கிள் இந்தாங்க்கோ உங்கட சைக்கிள்” எண்டு என்னட்ட தந்துபோட்டு சொன்னார்.”அப்ப 2 திறப்பு உங்க சைக்கிள் பூட்டுக்கு சேருது என்ன தம்பி?” எண்டார். இப்பிடி சொல்ல எனக்கு சிரிப்போட கடுபாயிட்டு...சரின்னு எண்ட சைக்கிள் பூட்ட பார்த்தா உடைக்கல வேற திறப்புதான் போட்டு திறந்து இருந்துச்சு...மனிசன் சொல்ல்றாது நம்புறமாரித்தான் இருந்துச்சு ஏன்னா வயசும் போய்டு அதோட கூப்பிட்டவுடன ஓடாம நிண்டுச்சு இல்லோ......  மூஞ்சீ வேற அப்பாவியா இருக்க உண்மையை உணர்ந்தன்.ஆக்சிடன்லியா தான் இந்த சம்பவம் நடந்து இருக்கெண்டு.

இருந்தாலும் ஒரு நப்பாசை கள்ளனா இருந்தா புடிச்சு குடுத்தா அவார்ட்டு வேற தருவாங்க எண்டு நினைச்சுட்டு கேட்டன்”சரி தாத்த உங்க பேர்த்தின்ர சைக்கில் எண்டுறியள் எங்க காட்டுங்க உங்க திறப்புக்கு அது திறபடுதோ எண்டு கேட்டன்”..உடன தாத்தா ரோட்டில நிண்ட அந்த லேடீஸ் சைக்கிள காட்டி அத போய் திறந்து பாரும் எண்டு திறப்ப தந்தார்...எங்க அது திறபட்டுட்டு...அவார்ட்டு கனவு புஷ்ஷ்ஷ்ச்...............”தாத்தா எனிமே பார்த்து திறவுங்க உங்கள் கண்டிராவிட்டால் எண்ட சைக்கில் உங்களிட்ட உங்க சைக்கில் ரோட்ல தான் இருந்து யாரும் எடுத்துட்டு போயிருப்பாங்க”எண்டு சொல்ல அவரும் சிரிச்சுட்டார்....“சரி தம்பி மன்னிச்சுடுங்கோ” எண்டு சொல்லிடு போய்ட்டார்................நானும் வண்டிய கட்டரெடி ஆகிறப்போ தான் ஒண்டு ஸ்ரைக் ஆயிச்சு.

“தாத்தா பேர்த்தீன்னு சொன்னாரே....................................................
பேர்த்தின்னா பொண்ணு. தாத்தா சொன்னத வைச்சு பார்த்தா எங்கவயசு இருக்கலாம்.....
“அவட  திறப்புக்கும் எண்ட பூட்டுக்குமே அவ்ளோ கெமிஸ்ட்ட்ரி எண்டா நமக்குள்ள எவ்ளோ இருக்க்லாம்”
 பேர கேட்காமவிட்டுடியே இடியட் இரோஷ் எண்டு நினைகிறதுக்குள்ள தாத்தா 300 மீட்டர் தூரத்தில போய்ட்டார்......................வேற என்ன கொஞ்சம் வித்தியாசமான சம்பவமாச்சே எங்கயாச்சும் எழுதுவம்  எண்டு நினைச்சுக்கொண்டே வீட்ட போய் சேர்ந்தன்...........
மீண்டும் அம்மா ”எங்க போய்டு வாரா 2.30 ஆச்சு மத்தியான சாப்பாடு எனி சமைக்கல போற இடத்தில சாப்பிடு.........”
உனக்கெல்லாம் எப்ப பொறுப்பு வருமோ?”................

இப்படிக்கு இடியட் இரோஷ்.

தேனீர் சந்திப்பு-கவித கவித
கடலோடு அடிவானம் கலவி கொள்ளும் நேரம்
அவளோடு உரையாட விண்ணப்பம் செலுத்தியிருந்தேன்.
மூன்றுவருட தவதில் அவள் கொடுத்த முதல் வரம் தேனீர் சந்திப்பு.
அவள் கண்களில் வெட்கமும் சின்ன பயமும் கலந்திருந்தது.
அதுவும் அழகாகத்தான் இருந்தது..
ஒரு மேஜையால் பிரிக்கப்பட்ட இரண்டு நாற்காலிகள்.
ஆனால் இரண்டிலும் அவளே உட்கார்ந்து இருந்தாள்.
ஒரு நிமிட மெளனம் இடையிடையே சில வார்த்தை ஓவியங்கள்..
 தித்திப்புக்கு தேனீர் சொன்னேன்.

மெதுவான காற்று அவளில் பட்டு என்னை முத்தமிட
அதில் சுடிதார் தாவணிக்கும் அவளுக்கும்-
நடக்கும் பெண்மை போராட்டம்,
சுடு தேனீரில் நனைந்த சுத்தமான உதடுகள்,
மூக்கு நுனியின் சிறு வியர்வைத்துளிகள்,
வண்ணபூச்சு பூசப்படாத கன்னங்கள்,
வார்த்தைகளால் முட்டிவிட்ட தொண்டைகுளி,
அவற்றை தடுக்கும் உதட்டு ரேகைகளின் கோலங்கள்,
இவற்றையெல்லாம் ஒரு நொடியில் ரசித்துவிட்டு.......

ஆவிபறக்கும் தேனீரை பார்த்துக்கொண்டு இருந்தவள்.
நான் பேச எடுக்க சட்டென்று என்னை பார்த்தாள்.
அக்கணமே என் உயிரையும் தேனீர்- கோப்பைக்குள் ஊற்றி பருகிவிட்டாள்..
இடைவேளையின்றி பேசினோம்-
வார்த்தைகளை கண்களுக்கு வாடகைவிட்டு..
இத்து போன கடிகாரம் ஆறு மணி ஆனதை அலாரம் போட்டு காட்டியது.
கடிகார முட்களும் குத்தும் என்று அன்றுதான் புரிந்தது.

நம்பிக்கை இல்லாமல் வானத்தை பார்த்து உறுதி செய்தோம்..
 என் வாழ்வில் மிக சிறந்த அரை மணிநேரம் அதுவாக தான் இருக்கும்..
சிறிது நேரம் கடிகாரத்தை பார்த்து அவளும் நானும் கடிந்துகொண்டோம்..
ஏதேதோ பேச எண்ணி பேசாமல் நின்றோம்.
ஆறிவிட்ட தேனீர் எம்மைபார்த்து சிரித்துகொண்டிருந்தது..
..........................................................................................................

நான்கு கால்களில் ஒரு உயிர் இரு திசையில் பிரியும் நேரம் 
அவள் புன்சிரிப்புடன் மீண்டும் சந்திப்போம் என்று
கைவிரல்களால் காற்றை குழைத்து சென்றாள்...
அவளை விட்டு என்னைகூட்டி...


இவன்  இரோஷன்.....

04/11/2012

ரஹ்மானின் புதிய கண்டுபிடிப்பு-ஷக்தி ஸ்ரீ கோபாலன்-நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கன்.

நேற்று இரவு வழமைபோல் பேஸ்புக்கில் முகம்புதைத்திருந்த போது நண்பன் ஒருவன் இப்பாடலை பகிர்ந்தான் .கேட்டவுடனே மயக்கிவிட்டது.இந்த மண்வாசனை சொட்டும் வரிகளையுடைய பாடலை அழகாக வித்யாசமா ஒரு பெண் ரஹ்மான் அருகிலிருந்து பாடிக்கொண்டு இருந்தாள்.


உடனடியாக கூகுலிலும் பேஸ்புக்கிலும் தேடினேன்.பேஸ்புக் ஐ.டீக்கு  ஒரு ரிக்குவஸ்ட போட்ட பின்(நாமெல்லாம் அப்பவே அப்பிடி) பின்னர் இதர தகவல்களைதேடினேன்.கிடைத்தவற்றையும் தெரிந்தவற்றையும் பகிர்கிறேன்.

"நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கன்" பாடல் சம்பந்தமான இன்றைய இரண்டாவது பதிவு இது.முதல் பதிவை காண....இப்பாடல் பற்றிய முதல் பதிவை படிக்க
கேரளாவை பிறப்பிடமாக கொண்டு தற்போது சென்னையில் வசித்துவரும் இளம்பாடகி.2008 ஆம் ஆண்டிலிருந்து பாடிவருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் கட்டுமானம் படித்துவிட்டு ROCK BAND ஒன்றில் பாடிவருகிறார்.கிளாசிக்கல்,ஜாஸ்,ஃபங்,போன்ற இசையில்தேர்ச்சிபெற்றவர்.


இவர் தனது சொந்த இசையில் பாடல் எழுதி வெளியிட்டுள்ளார்.
2009 இல் சென்னை சங்கமம் விழாவுக்காக முதன்முதலில் போல் ஜோக்கப் இன் இசையில் ”காவேரி” எனும் அழகான பாடலை பாடியுள்ளார்.
இப்பாடல் மற்றும் இவரின் படைப்புகளை இங்கே கேட்கலாம்.
.இவரது ஆங்கில பாடல்கள் மற்று காவேரி என்னும் பாடல்களின் ஓடியோ வடிவம் இங்கே பெறலாம்


03/11/2012

இசைப்புயலின் நெஞ்சுக்குள்ள-MTV UNPLUGGED-கடல் பாடல்கள்.......
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்என்று வைரமுத்து வார்தைகளால் முடிக்கப்பட்டு இசைப்புயலின் இசைக்கோர்வை கோர்க்கப்பட்டு நேற்றைய தினம் கடல் திரைப்படத்தின் SINGLE SONG வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பேஸ்புக்,ட்வீட்டர்,மற்றும் இதர தளங்களில் எங்கு பார்த்தாலும்  இந்த பாடல் தான் அதிகம் பகிரப்பட்டது.நீண்ட நாட்களின் பின் இசைப்புயலின் இசையில் அழகு தமிழில் மெலோடி பாடல் வந்துள்ளது என்றும் இப்பாடல் தம்மை ரஹ்மானின் ஆரம்ப காலத்துக்கு அழைத்து சென்றுவிட்டது எனவும் நண்பர்கள்,இசை ஆர்வலர்கள் கூறுகின்றனர்கொண்டாடுகின்றனர்.

இசைக்கப்பட்ட பாடல்கள்

M.TV UNPLUGGED எனும் நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது.இந்திகழ்ச்சியில் ரஹ்மான் தனது 7 பாடல்களை UNPLUGGED வடிவில் கொடுத்திருந்தார்.
இப்பாடலும்  இந்த நிகழ்ச்சியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது

சக்திசிறீ கோபாலன்
இப்பாடலை சக்திசிறீ கோபாலன் எனும் பாடகி பாடியுள்ளார்.இவர் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.இப்பாடல் UNPLUGGED VERSION  என்பதால் அதன் இசைகோர்வைகள் மிக மென்மையாக அமைக்கப்பட்டு இருந்தனரஹ்மான் கையில் அக்கோர்டியன் இசைகருவியை வாசித்தபடியும் நல்ல ஒரு கலர் ரோன்  உடன் இந்த பாடல் வெளிவந்துள்ளது.பின்னணியில் வரும் கிட்டார் மற்றும் வயலீன் இசைகள் மனதை மயக்குகின்றன.
பாடல் வரிகளையும் பாடலையும் பகிர்கிறேன்.