Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

11/08/2013

இரண்டாம் உலகம்-ஹாரீஸின் இசை


காதல் கொண்டேன்,7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை என்று யுவனின் அட்டகாசமான இசையுடன் கைகோர்த்த செல்வராகவன், யுவனுடனான பிரிவுக்கு பின்னர் ஆயிரத்தில் ஒருவன்,மயக்கமென்ன படங்களில் ஜீ.வீ.பிரகாஷை தெரிவுசெய்திருந்தார்.இருப்பினும் செல்வாவும் யுவனும் மீண்டும் இணையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் இரண்டாம் உலகம் படத்துக்கு யுவன் இசையமைக்க இருப்பதாயும் சில தகவல்கள் இணையவுலகில் வலம்வந்திருந்தது. ஆனால் வைரமுத்து-ஹாரீஸ் கூட்டணியிலே இரண்டாம் உலகம் படம் ஆரம்பிக்கப்பட்டது. 

இரண்டாம் உலகம் பாடல்கள் வெளிவந்த பின்னர் ஹாரீஸ் “கிங் ஒஃப் ரொமான்ஸ்” என்று அழைக்கப்படுவார் என்று செல்வா சொன்னது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் துப்பாக்கி படத்துக்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரீஸ் இசையமைத்திருக்கும் படம் என்பாதால் என்னவோ ஒரிஜினல் மெலோடிகள் கொடுப்பதற்கு கொஞ்சம் மெனக்கட்டிருக்கிறார் மனிதர். ஹாரீஸுக்காக நீண்டகாலத்துபின்னர் மொத்த பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.




னி மொழியே”
பாடியவர்-கார்த்திக்.

கொஞ்சம் வில்லங்கமான பெயருள்ள பாடல் தான். கலைஞர் மேலுள்ள மரியாதையில் வைரமுத்து இப்படி பல்லவியை ஆரம்பித்து இருப்பாரோ என்னவோ.இப்டி சிந்திக்க வைத்தாலும் பாடல் கேட்டபின் ஒரு அணுவும் அசையாது என்பது போல் ஹாரீஸும் கார்த்துக்கும் நம்மை கட்டி போட்டுவிடுகிறார்கள். இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்தபாடல் இது.ஹாரீஸ் இசையில் கார்த்திக் பாடிய அவள் உலக அழகியே,ஒரு ஊரில் அழகே உருவாய்,விழி மூடி ஜோசித்தால்,ஹசிலி பிசிலி வரிசையில் இன்னொரு ஹிட் பாடல்.வழமையான ஹாரீஸ் கிட்டார் பின்னணிகள்,இடையிடையே புட்டிங்கில் பிளம்ஸ் போல பெண்குரல் கோரஸ்,தெளிவான நீரோடை போல குரல்,வரிகளை கொல்லாத இசை என்று இப்பாடலை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

-முத்தமா கேட்கிறேன் முறுவல் தான் கேட்கிறேன்.
-வலதுகால் எட்டுவை வாழ்க்கையை தொட்டுவை.

இரண்டு சரணங்களிலும் வரும் இந்த இரண்டு வரிகளையும் கார்த்திக் பாடும் இடம் அருமை.” வழமை போல வைரமுத்து கிளாஸ்.


ன்னவனே மன்னவனே”
பாடிவர்கள்-கோபால் ராவ்,ஷக்தி சிறீ கோபாலன்

பாடல் கிட்டாருடன் ஆரம்பிக்கும் போது வழமையான ஹாரீஸ் பாடல் என்று தோன்றவைத்தாலும் “மன்னவனே மன்னவனே” என்று வரிகளில் சப்ரைஸ் காத்திருக்க பாடல் கொஞ்சம் கிராமிய மெட்டோடு மேற்கத்திய இசையோடு பயணிக்க ஆரம்பிக்கும். நெஞ்சுக்குள்ளே,எங்க போனா ராசா என்று ரஹ்மானிடம் பாடிக்கொண்டிருந்த ஷக்திசிறீ கோபாலன் இப்பாடலுக்கு சரியான தெரிவு. இரண்டு இடைஇசைகளும் ஃப்லூட், பியானோ,வயலீன் இசைகளுடன் அழகாக கோர்க்கப்பட்டு இருக்கிறது. பாடலின் இடையே லைட்டா ஹாரீஸ் பாடல் ஒன்றின் தேஜா வூ பீலிங் வருவது எனக்கு மட்டுமா தெரியல. இந்த ஆல்பத்திலுள்ள இன்னுமொரு ஹிட் மெலோடி பாடல்.




ன் காதல் தீ”
பாடியவர்-எஸ்.பீ.பாலசுப்ரமணியம்.

இரண்டாம் உலகம் பாடல்களில் ஒரு மாஸ்டர் பீஸ் மெலோடி என்று சொல்லலாம். எஸ்.பீ,பீ இன் கம்பீரமான காதல் கொஞ்சும் குரல் அதற்கு மேல் கவிப்பேரரசின் வரிகள் கிளாசிக்கல் வாத்தியங்களின் பின்னணி இசை, பெண்குரல்களின் கோரஸ் என்றும் ஹாரீஸ் ஸ்டைலில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு மயக்குகிறது. முக்கியமாக இரண்டு இடையிசைகளும் அபாரம்.
இந்த பாடலில் வரும் சில வரிகள்.

”உடல்கள் இரண்டும் சேரும் முன் உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே”
“இதயம் இரண்டும் தூரம் தான் இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே”

பாடும் நிலா பாடிய மலரே மெளனமா,காதல் ரோஜாவே வரிசையில் இந்த பாடலும் நிச்சயம் இடம்பெறும். பாடும் நிலாவை வைத்து இந்த ஜெனெரேஷன் இசை ரசிகர்களுக்கு ஒரு அழகான மெலோடியை கொடுத்த ஹாரீஸுக்கு நன்றிகள்.


விண்ணைத்தாண்டி அன்பே”
பாடியவர்-விஜய் பிரகாஷ்

வழமையான அக்மார்க் ஹாரீஸ் பாடல். கொஞ்சம் வேகமான எலக்ரானிக் இசையுடன் வானில் பயணிப்பது போல ஒரு உணர்வு. பாடலை கேட்கும் போது நிச்சயம் ஹாரீஸ் இசையில் விஜய் பிரகாஷ் பாடிய முன்னைய பாடல்கள் நினைவுக்கு வரும்.
“திசு அழிந்தாலும் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா”
கொஞ்சம் விஞ்ஞானமா வைரமுத்து கேள்விகேட்கிறார்.




ராக்கோழி ராக்கோழி”

பாடிவர்கள்-ஹரிஹரன்,சிறீராம்

இந்த பாடலிலும் ஒப்பனிங்குக்கும் பாடலுக்கும் இடையே பெரிய ஒரு இடைவேளை. வீரபாண்டிக்கோட்டையிலே பாடல் ஸ்டைலில் ஒரு பாடல்.இந்த பாடாலுக்கு அவ்வளவு மெனக்கட்டு இருக்கமாட்டார் ஹாரீஸ்.கொஞ்சம் ஆக்ரோஷமாக ஹரிஹரன் ஆரம்பிக்க சிறீராம் அதை பிக் ஆப் பண்ண பாடல் தொடரும் இரண்டு சரணங்களிலும் ஹரிகரனும்,சிறீராமும் பகிர்ந்து பாடியுள்ளனர். இரண்டு சரணங்களும் முடியும் இடங்களில் ஃபீல்  அருமை.


னங்கள்ளு விஷமுள்ள”
பாடியவர்-தனுஷ்

”வை திஸ் கொலவெறி”ன்னு எப்ப பாடினாரோ அன்னைக்கு ஆரம்பிச்ச கிக்ஸ்ரார்ட் இன்னும் ஓடிட்டு இருக்கு என்றால் தனுஷ் ஒரு அதிஷ்டசாலி என்று சொல்லமுடியாது. தனக்கேற்ற இலகுவான பாடல்களை தெரிவு செய்து ஒரு பாடகராக தன்னை நிருபித்து வருகிறார் சூப் பாய் தனுஷ். தனுஷும் ஹாரீஸும் இதுவரை எந்த படத்திலும் பணியாற்றவில்லை.இருந்தாலும் இந்த பாடல் மூலம் அந்த குறையை நிவர்த்திசெய்த்துள்ளனர்.வழமையாக தனுஷ் காதல் தோல்வி பையன்களுக்காக பாடுவார் இந்த பாடல் கல்யாணம் பண்ணி அவஸ்தைபடும் கணவர்களுக்கானதாக இருக்கும் என்று செல்வா கூறியிருந்தார். மொத்தத்தில் அஞ்சல,வேணாம் மச்சான் வேணாம் வரிசையில் ஹாரீஸ் ஸ்டைல் தனுஷ் பாடலிது.




ஹாரிஸ் மெலோடிகளில் சிரத்தையை காட்டியுள்ளார். சில பாடல்களில் எங்கேயே கேட்ட மயக்கம் என்ற வார்த்தையை தவிர்க்கமுடியவில்லை. இவற்றை திருத்திக்கொண்டால் ஹாரீஸ் ஹாலிவூட் பக்கம் ஒரு வலம் வரலாம். அப்புறம் அதையே தமிழ்ல போடலாம்.ஒட்டுமொத்தமா பார்த்தால் ஆல்பம் இரண்டாம் உலகம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கசெய்துள்ளது. நிச்சயம் ஒரு ஹிட் ஆல்பமாக கொள்ளப்படும். 

செல்வா-ஹாரீஸ் கூட்டணி இன்னுமொரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கு.

-ரோஷன் புவிராஜ்-

02/05/2013

எதிர்நீச்சல்- திரைவிமர்சனம்


நடிகர்கள்-சிவகார்த்திகேயன்,ப்ரியா ஆனந்த்,நந்திதா,சதீஷ்,ஜெயபிரகாஷ்
இசை-அனிருத்
ஒளிப்பதிவு-வேல்ராஜ்
எடிட்டிங்-கிஷோர்
எழுதி இயக்கியவர்-துரை செந்தில்குமார்
தயாரிப்பு-தனுஷ்

சுமாரான கதையும் சிவகார்த்திகேயனினதும் பரோட்டா சூரியினதும்   சரவெடிகள் ஆங்காங்கே இருந்ததாலும் வெற்றிக்கொடியை நாட்டிய
கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கு பின்னர் சிவகார்த்திகேயன் சோலோ ஹீரோவாக நடித்துவெளிவந்திருக்கும் படம் எதிர்நீச்சல்.
சிவகார்த்திகேயனின் பாட்டி வைத்த குஞ்சிதபாதம் என்ற பெயரால் தன் வாழ்கையில் அனேக சந்தர்ப்பங்களில் அசிங்கப்படும் சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரீஷ் என்று மாற்றிக்கொள்கிறார்.அதன் பின் அவர் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் எதிர்நீச்சல்.சின்ன சின்ன விசயங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
இந்த ஒன்லைனை  வைத்து ரசிக்கவைக்கும் காமடி,செண்டிமண்ட்,கொஞ்சம் அலட்டல்கள்,கலக்கலான பாடல்களுடன் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குமர் துரை செந்தில்குமார்.

சிவகார்த்திகேயன்.

குஞ்சிதபாதம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அவஸ்தை படுவதாக இருக்கட்டும்,ஓனரின் குண்டுப்பையனை வைத்து ப்ரியா ஆனந்தை லவ்வுவதாக இருக்கட்டும் முற்பாதியில் காமடியில் அசத்துகிறார்.பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி, பாடிலாங்குவேஜ்,காஷ்டியூம்ஸ் எல்லாவற்றிலும் கொஞ்சூண்டு ரிச் லுக் தெரிகிறது.இப்படியே போனால் அடுத்த படத்தில் சீ.பீ,ஐ ஆபீசராகவும் நடிக்கலாம் இவர்.ஆனால் பிற்பாதியில் ஓட்டவீரனாக ஸ்கோர் செய்யவேண்டிய இடங்களில் கொஞ்சம் சொதப்பிவிட்டாரோ என எண்ணத்தோன்றியது.அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக ஒரு ஓட்டவீரனின் பாடிலாங்குவேஜ்ஜை ஸ்ரடி பண்ணியிருக்கலாம்.

அனிருத்.

 இந்த படத்தோட இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம்.ஐந்து,ஆறு மாதங்களுக்கு முன்னரே பாடல்கள் வந்து பாக் டூ பாக் ரேடியோக்களில் ஒலித்து இப்படத்துக்கு நல்ல ஒரு பப்லிசிட்டியை கொடுத்திருந்தது. “வெளிச்சப்பூவே” மெலோடியாக இருக்கட்டும் “பூமி என்ன சுத்துதே” ,”ஸ்பீடு ஸ்பீடு” ,”நிஜமெல்லாம் மறந்துபோச்சு”,பாடல்கள் எல்லாமே கலக்கல். அதிலும் வெளிச்சப்பூவே பாடல் அவ்ளோ அழகாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.அனிருத்தும் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
”லோக்கல் பாய்ஸ்” பாடல் வலிந்து திணிக்கப்பட்டு இருப்பினும்  தனுஷ்,சிவா,நயந்தாரா என்று குத்தாட்டத்தில் பின்னிபெடலெடுத்திருந்தனர்.
பின்னணி இசையில் ஒரு முதிர்ச்சியான ஒரு இசையமைப்பாளர் போல செயற்பட்டுள்ளார்.இனிவரும் காலங்களிலும் பின்னணி இசையில் கவனம் செலுத்தினால் நல்ல எதிர்காலம் இருக்கு.

ப்ரியா ஆனந்த்&நந்திதா.

 

முற்பாதியில் ரீச்சராக சிவகார்த்திகேயனின் வெளிச்சப்பூவாக விதவிதமான சாறிகள் அணிந்து மனசில் ஒட்டிக்கொள்கிறார் ப்ரியா ஆனந்த்.
அதிலும் வெளிச்சப்பூவே பாட்டில் பொண்ணு அப்டி ஸ்கோர் செய்திருக்கு.
180 படத்திற்கு பிறகு நேரடி தமிழில் ப்ரியா ஆனந்துக்கு நல்ல ஒரு ஸ்கோப் எதிர்நீச்சல் மூலம் கிடைக்கவாய்ப்புண்டு. பிற்பாதியில் வழமையான ஹீரோயின்கள் செய்வது போல ரெண்டு சீன்களில் தலைகாட்டுகிறார்.

பணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாகவும், சிவகார்த்திகேயனுக்கு கோச்சாகவும் பிற்பாதியில் முழுக்க வருகிறார் நந்திதா.அட்டகத்தி படத்துக்கு பின்னர்   நல்ல ஒரு கரக்டர் அளவான நடிப்பைகொடுத்திருக்கிறார்.

வேற என்ன....???

சிவாவின் நண்பனாக வரும் சதீஷ் கிடைக்கும் காட்சிகளிலெல்லாம் பின்னியிருக்கிறார்.அதிலும் குறிப்பாக மதன் பாப்பை கலாய்க்கும் காட்சிகள் அருமை.சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களிலும் ஒரு காமடி ட்ரெண்டை உருவாக்கலாம்.மனோபாலா ஒரு காட்சியில் வந்தாலும் வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறார்.அதுவும் கேசவன் என்ற பெயர் K7 ஆயிருப்பதால் K9(கேனையன்) ஆக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்று பீலா விடுவது அதன் பின்னர் வரும் சீனும் கலக்கல்.சிவாவை ஆரம்பத்திலே ஒரு மரதனோட்ட வீரனாக காட்டுவது பிற்பாதி லாஜிக்கிற்கு கொஞ்சம் உதவியிருக்கிறது.

இவற்றைவிட அண்மையில் வைத்திய பரிசோதனையில் ஆண் என நிருபிக்கப்பட்டு பதக்கங்கள் பறிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை பிங்கி பற்றி ஒரு செய்தி படித்திருப்போம். இந்த ஒரு வரிச்செய்தியை கொஞ்சம் மாற்றியமைத்து நந்திதாவின் கரக்டரை உருவாக்கிய இயக்குனருக்கு சபாஷ்.

இன்றைய இளைஞர்கள் தமக்கு தம் பெற்றோர்கள் வைக்கும் பெயரை ஆங்கில கலப்புடனும்,ஸ்டைல் என்ற பெயரில் வேற்றுமொழிகளையும் கலந்து பெயர் மாற்றம் செய்வது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த பேஸ்புக்கில் இது போன்ற கண்றாவிகளை காணலாம்.
ஆனால் நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் என்பது நம் சந்ததியின் அடையாளம் என்றும் பெயர் மாற்றுவதை விட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்னும் அழகான சமுகக்கருத்தை நகைச்சுவை, செண்டிமண்ட் கலந்து சொன்னதற்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.


இப்படி பிளஸ்கள் இருந்தும் பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது.
அனைத்தும் ஏற்கனவே சலிப்பூட்டிய ஊக்கிக்ககூடிய காட்சிகளாக கோர்க்கப்பட்டுள்ளது.சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என தோன்றுவதை தடுக்கமுடியவில்லை.
அந்த கிளைமாக்ஸ் 10 நிமிடகாட்சிகள் எப்படியோ படத்தை முடிக்கவேண்டும் எனும் நோக்கில் செயற்கை தனமாக நகர்கின்றன. சிவாவை மரதன் ஓட்டப்பந்தய வீரனாக ஜீரணிக்கமுடியவில்லை. அப்படியொரு செயற்கைதனம்.நந்திதாவின் கோச்சாக வரும் ஜெயபிரகாஷ்,பணக்கார கோச்சாகவரும் ரவி பிரகாஷ் வழமையாக படங்களில் பார்த்து சலித்த கரக்டர்கள்.ஜெயபிரகாஷ் போன்ற ஒரு திறமையான நடிகர் இவ்வாறான கரக்டர்களை தவிர்க்கலாம்.முற்பாதியில் திடீரென்று தான் ஏதும் சாதிக்கவேண்டும் என்று கண்சிவந்து சிவா கிளம்புவது பிற்பாதிக்கான வழியாக இருப்பினும் ஒட்டவில்லை.இவற்றை கொஞ்சம் சரி செய்திருந்தால் எதிர்நீச்சலை மொத்தமாக இன்னும் கொண்டாடியிருக்கலாம். இருப்பினும் இயக்குனர் எதிர்நீச்சல் மூலம் சிவகார்த்திகேயனை வெற்றிகரமான சோலோ ஹீரோவாக ஒரு படி மேல் கொண்டு வைத்திருக்கிறார்.


வன் இரோஷன்.









21/04/2013

உதயம் NH4-திரைவிமர்சனம்



சித்தார்த்(ஹீரோ)
*******************


 

# டூயட் பாடல்,சண்டைக்காட்சிகள்(ஓரளவு சகிக்ககூடிய),காதல் காட்சிகள் (சகிக்கமுடியாத) உடன் புத்திசாலித்தனமான ஒரு ஹீரோவாக படம் முழுக்க வருகிறார்.
# பல பெண்கள் கவர் போட்டோக்களில் மாட்டும் ஒரு அழகான ஹீரோவை ஏன் இப்படி படம் முழுக்க சிரிச்சாப்போச்சு என்பது போல உம் என்றே இயக்குனர் நடிக்கவைத்துள்ளார் என்பது கேள்விக்குறி.
# இந்த படத்தில் தமிழில் பேசும் ஒரே ஒரு நபரும் இவரே.

#ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துள்ளார் சித்தார்த்.
# இருப்பினும் சித்தார்த்துக்கு இந்த படம் தமிழில் நல்ல ஒரு மீள்வரவு.



கே.கே.மேனன்(வில்லன் மாதிரி)

************************************




# இந்த படத்தில் ரசித்த கரக்டர் இவரோடது தான்.
# சில இடங்களில் பார்வையாலே கலக்குகிறார்.
# இந்த படத்தில் பல சீன்களில் பாராட்டையும் சில சீன்களில்(கிளைமாக்ஸ்)     பரி
தாபத்தையும் ஏற்படுத்துகிறார்
#படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவுவரை இவரது பாடிலாங்குவேஜ் அருமை. .
# ஹிந்தி சினிமாவில் நானா படேகர்,இர்பான் கான்,மனோஜ் பாஜ்பேய்,நவ்ஷுதின் சித்திக்,வரிசையில் கே.கே மேனனுக்கும் ஒரு இடமுண்டு.
# அவரின் சில ஹிந்தி படங்களோடு ஒப்பிடும் போது இது அவருக்கு ஒரு சாதாரண படமே.




அஷ்ரிதா ஷெட்டி(ஹீரோயின்)  

*********************************

# நாங்க இங்லீஸ் பேசினா எப்டி இருக்குமோ அப்டி இருக்கு இந்த பொண்ணோட தமிழ்.
# நிறைய இடத்தில் ஒரே டயலக்கை பேசி வெடிச்சிரிப்பை ஊட்டியவர் இவர் தான்.
# சில ட்ரெஸ்களில் அழகா தெரிகிறார் அடுத்த ஷாட்லயே சப்பையா காட்சியளிக்கிறார்.
# “இந்த பொண்ணு அட்டு பிகரா குட்டு பிகரா???”
படத்தோட பெரிய சஸ்பென்ஸ்ல இதுவும் ஒன்று.

வேற என்ன?
**************
# சாதாரண கதையாக இருந்தாலும் கொஞ்சம் சுவாரஷ்யமாக சொன்ன இயக்குனர் குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும்.
# ஒன்றிரண்டு “ட்விஸ்டுகள்” இருப்பதால் படம் தப்பிக்க வாய்ப்புகள் உண்டு.
# இத விட படத்தில் சித்தார்த் நண்பனாக வரும் குண்டுப்பையன், சின்சியர் ஆபீசராக வரும் மனிதர் உண்மையிலேயே கலகலப்பை ஊட்டுகின்றனர்.
# ஜீ.வீ யின் பாடல்கள்  “யாரோ இவன்” அழகான மெலோடி
“ஒரக் கண்ணால” கானா ரகம். ரசிக்கவைக்கின்றன.
# பின்னணி இசையில் மயக்கமென்ன,மதராசபட்டணம் பாடல்களை மீள இசைத்து எரிச்சலூட்டுகிறார்.
# ஒளிப்பதிவாளர் சில சீன்களீல் கலக்கியுள்ளார்.
இதற்கு உதாரணமாக சித்தார்த் ட்ரெய்னில் தப்பி போகும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி என்பனவற்றை கூறலாம்.
# படத்தில் சில சீன்கள் ரசிக்கவைத்தாலும் இடையிடையே வரும் பாடல்கள்,சகிக்க முடியாத காதல்காட்சிகள் படத்துக்கு வேக தடைகள்.
# படத்தில் கதாநாயகி உட்பட மூன்று கரக்டர்கள் கே.கே.மேனனுக்கு தாங்க ஏதோ இயக்குனராயும் கே.கே மேனன் ஏதோ தயாரிப்பாளர் போலயும் எண்ணி
இது தான் நடந்துச்சு என்றுஃபீல் பண்ணி கதை சொல்கிறார்கள் .
அதிலும் முதலில் கதை சொல்லும் பணக்கார பையன் “காக்கா எண்ட வடையை தூக்கிடிச்சு டீச்சர்” பாணியில் சொல்கிறார்.
அங்கேயும் நிச்சயம் வயிறுகுலுங்க சிரிக்கலாம்.
# இப்டி ஆங்காங்கே ஒட்டைகளும் ரசிக்கக்கூடிய விசயங்களும் படத்ல இருக்கு.

# மொத்தத்தில் வெற்றிமாறன் கதை,வசனத்தில் என்பதோடு புத்திசாலித்தனமாக நிறுத்தி தன் உதவி இயக்குனர் மணிமாறனை இயக்குனராக களமிறக்கி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்.

14/10/2012

மாற்றானில் என்னதான் இருக்கு???


முன்னமெல்லாம் முதல்சோவுக்கு தியேட்டர் போறப்போ நல்ல படமா இருக்கும்னு எதிர்பார்த்துட்டு போவோம்.ஆனால் இப்பெல்லாம் அப்டி இல்லை.கட்டாயம் மொக்கை படமாதான் இருக்கும்னு நினைச்சிட்டு போக வைச்சுட்டாங்க கடசியா வந்த மிகப்பெரும் வராலாற்று மொக்கை படங்கள்.பெஸ்ட் ஷோ பாக்கல்லன்ன தெய்வக்குத்தமாகிடும் என்ற காரணத்துக்காகாவே  நிறையா ஜீவன்கள் தியேட்டர்ல வர்ற  படம் எல்லாம் பார்த்து படம் முடிந்து வரும்போது கடுப்புடன் திரும்புவது வழக்கமாக போய் விட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க  மாற்றன் பார்க்க ஒரு ஸ்பெசல் காரணம் இருக்கு  அதான் நம்ம “காஜல்” கண்ணு.காஜலோட பருத்த..... ”கண்ணை” தியேட்டர்ல இன்னும் பெருசா பார்க்க போறம்ன நப்பாசை தான் அது(ஐ ஆம் எ குட் பாய் கூல்).

நம்ம பயலுவ “மாற்றான்” படத்தோட ட்ரெய்லர்,போஸ்டர் பார்த்தே சொல்லிட்டாங்க ஏதோ இங்கிலீஷ் பட காப்பி என்று.இப்ப யார் சார் இதெல்லாம் ஜோசிக்கிறது காப்பி அடிச்சாலும் பார்க்க கூடிய படம் வந்தா போதும் சாமி’ன்னு ஆயிடிச்சு இப்போதைய தமிழ் சினிமா நிலமை.நானும் அதே ரகமாயிட்டன்.இதுகெல்லாம்  “சகுனி”,”பில்லா 2”, ”முகமூடி”, ”தாண்டவம்” போன்ற மரணமொக்கைகளே காரணம்.சரி நாலோட அஞ்சா போகட்டும்’ன்னு படத்த பார்த்து முடிச்சுட்டன்.கடசியா வந்த எல்லாப் படங்களுக்கும் விமர்சனம் எழுதலாம்னு ஜோசிச்சுட்டு மனம் இல்லாம விட்டுருவேன்.எழுத ஒன்னும் இல்லை என்பதே காரணம்.(முகமூடி  நண்பர் கேட்டதுக்காக வலைதளம் ஒன்றிற்கு எழுதினேன்).

வந்த படங்கள பத்தி யார் கேட்டாலும் மொக்கை படம்டா பாக்காத’னு சொல்லியே வாய் வலிச்சதால இந்த முறை கொஞ்சம் வித்யாசமா படத்தில இருக்கிற நல்ல மாட்டர்கள் பத்தி மட்டும் சொல்லலாம்னு ஜோசிச்சன்.
(இந்த பதிவு விமர்சனம் அல்ல)அதுக்கு முன்னம் என் பார்வையில் மாற்றான் எப்டின்னு ஒரு வரியில் சொல்றன்.

”நாம போற ரோட்ல நாலு,அஞ்சு மொக்கை பிகருகள் ஒவ்வொரு நாளும்  காணுறம்’னு வைங்களேன்.திடீர்னு ஒரு நாள் அந்த ரோட்டால ஒரு சுமாரான பிகர் க்ராஸ் ஆகிறப்போ ஒரு பீல் வருமே அந்த பீல் தான் மாற்றான் பார்த்து முடிஞ்சு வர்ரப்போ இருந்துச்சு”
(இந்த டயலக்கின் உரிமை என் நண்பன் லவன்’இற்கே சேரும்..)

மாற்றான் கதையில் சிக்கல் இல்லை எனினும் எடுத்துக்கொண்ட கதாபாத்திரம் சிக்கலானது.ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள்.
ஒரு இதயத்தில்  இயங்கும் இரு உடல்கள்.படத்தோட இண்டர்வெல் மட்டும் இரண்டு சூர்யாவும் ஒன்றாகவே இருப்பார்கள். அது வரைக்கும் இரண்டு பாடல்கள்,நீண்ட சண்டைக்காட்சிகள்,காமடி சீன்கள்,லவ் சீன்கள் என்பவற்றை ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களை வைத்து பிரம்மாண்டமாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்கள் (இண்டர்வலுக்கு முன்னய சீன்களை பற்றியே கதைத்துகொண்டு இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்). மாற்றான் குழுவினர் இதற்காக நிறைய உழைத்து இருக்கிறார்கள் .அதற்கு ஒரு சபாஷ்.