10/11/2012

தேனீர் சந்திப்பு-கவித கவித




கடலோடு அடிவானம் கலவி கொள்ளும் நேரம்
அவளோடு உரையாட விண்ணப்பம் செலுத்தியிருந்தேன்.
மூன்றுவருட தவதில் அவள் கொடுத்த முதல் வரம் தேனீர் சந்திப்பு.
அவள் கண்களில் வெட்கமும் சின்ன பயமும் கலந்திருந்தது.
அதுவும் அழகாகத்தான் இருந்தது..
ஒரு மேஜையால் பிரிக்கப்பட்ட இரண்டு நாற்காலிகள்.
ஆனால் இரண்டிலும் அவளே உட்கார்ந்து இருந்தாள்.
ஒரு நிமிட மெளனம் இடையிடையே சில வார்த்தை ஓவியங்கள்..
 தித்திப்புக்கு தேனீர் சொன்னேன்.

மெதுவான காற்று அவளில் பட்டு என்னை முத்தமிட
அதில் சுடிதார் தாவணிக்கும் அவளுக்கும்-
நடக்கும் பெண்மை போராட்டம்,
சுடு தேனீரில் நனைந்த சுத்தமான உதடுகள்,
மூக்கு நுனியின் சிறு வியர்வைத்துளிகள்,
வண்ணபூச்சு பூசப்படாத கன்னங்கள்,
வார்த்தைகளால் முட்டிவிட்ட தொண்டைகுளி,
அவற்றை தடுக்கும் உதட்டு ரேகைகளின் கோலங்கள்,
இவற்றையெல்லாம் ஒரு நொடியில் ரசித்துவிட்டு.......

ஆவிபறக்கும் தேனீரை பார்த்துக்கொண்டு இருந்தவள்.
நான் பேச எடுக்க சட்டென்று என்னை பார்த்தாள்.
அக்கணமே என் உயிரையும் தேனீர்- கோப்பைக்குள் ஊற்றி பருகிவிட்டாள்..
இடைவேளையின்றி பேசினோம்-
வார்த்தைகளை கண்களுக்கு வாடகைவிட்டு..
இத்து போன கடிகாரம் ஆறு மணி ஆனதை அலாரம் போட்டு காட்டியது.
கடிகார முட்களும் குத்தும் என்று அன்றுதான் புரிந்தது.

நம்பிக்கை இல்லாமல் வானத்தை பார்த்து உறுதி செய்தோம்..
 என் வாழ்வில் மிக சிறந்த அரை மணிநேரம் அதுவாக தான் இருக்கும்..
சிறிது நேரம் கடிகாரத்தை பார்த்து அவளும் நானும் கடிந்துகொண்டோம்..
ஏதேதோ பேச எண்ணி பேசாமல் நின்றோம்.
ஆறிவிட்ட தேனீர் எம்மைபார்த்து சிரித்துகொண்டிருந்தது..
..........................................................................................................

நான்கு கால்களில் ஒரு உயிர் இரு திசையில் பிரியும் நேரம் 
அவள் புன்சிரிப்புடன் மீண்டும் சந்திப்போம் என்று
கைவிரல்களால் காற்றை குழைத்து சென்றாள்...
அவளை விட்டு என்னைகூட்டி...


இவன்  இரோஷன்.....