18/12/2012

இலங்கை இசைக்கலைஞர்களின் ORIENTAL MUSIC ORCHESTRA -2012SRILANKA'S NATIONAL ORIENTAL  MUSIC ORCHESTRA என்ற இந்நிகழ்ச்சி COLOMBO ROYAL NORWEGIN EMBASSY  ஏற்பாட்டில்  இந்தவருடம் மார்ச்  6 ஆம் திகதி  கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த தமிழ்,சிங்கள மொழிகளை சேர்ந்த சிறந்த  நூறு இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.இந்நிகழ்வை நேரில் பார்க்கமுடியவில்லை எனினும்  இந்நிகழ்வில் வயலின் இசைத்த யாழ் பல்கலைக்கழக நண்பி மூலம் சில மாதங்களிற்கு முன்னர் பார்க்க நேரிட்டது. மிகவும் அற்புதமான இசை ஒருங்கமைப்புடன் பாரம்பரிய இசை கருவிகளின் சங்கமத்தில் இவ் ஓர்கெஸ்ட்ரா ஒழுங்கமைக் கப்பட்டிருந்தது.  இலங்கையில் அதிகமான இசை இசை நிகழ்ச்சியை கண்டுகளித்திருப்பினும் இவ் ஓர்கெஸ்ட்ராவில் இசைக்கப்பட்ட அனைத்து இசை கோர்வைகளும் என்னை கட்டிப்போட்டுவிட்டன.அதன் பின்னர் இதை பற்றி பகிரலாம் என்ற எண்ணம் தோன்றியது.அது பற்றிய ஒரு தேடலில் கிடைத்தவையே இந்த பதிவு
இந்நிகழ்ச்சி இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் இசையை பிரதிபலிப்பதான ஒரு கலவையாக இருந்தது.இந்நிகழ்ச்சிக்கான வழிநடத்தலை INSTITUTE OF HUMAN EXCELLENCE AND ARU SRI ART THEATRE மேற்கொண்டிருந்தது.இந்நிகழ்ச்சிக்கான பிரதான ஆலோசகராக திருமதி கலாசூரி அருந்ததி சிறீரங்கனாதன் செயற்பட்டார். ஈழத்தின் புகழ்பெற்ற கலாவித்தகர் இவர். இவர்களின் முற்றுமுழுதான சுயவிபரம் சாதனைகள் விருதுகள் பற்றி இத்தளத்தில் அறியலாம்....

திருமதி அருந்ததி சிறீரங்கநாதன்
http://184.154.234.7/~arunthat/profile.html

தென்னிந்திய நடிகர் வினித்தால் கௌரவிக்கப்பட்டபோது
இந்நிகழ்ச்சிக்கான பயிற்சி ஆறு மாத காலங்களாக நடைபெற்று இறுதியில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. இலங்கையின் முன்னணி இசை 
கலைஞர்களான திருமதி அருந்ததி சிறீ ரங்கனாதன்,டாக்டர் நிர்மலாகுமாரி ரொட்ரிகோ,குமாரலியனவத்தே,சோமசிறி இலசிங்க, எஸ்.மகேந்திரன்விஜேரத்ன ரணதுங்க,டாக்டர் பாலாம்பிகை ராஜேஸ்வரன் போன்றவர்கள் இந்நிகழ்ச்சிக்கான பயிற்சியை வழங்கினர்.


இவ் ஓர்கெஸ்ட்ரா  முக்கியமாக தென்னிந்திய கர்நாடக இசையை பிரதிபலிக்கும் முகமாகவும் இசைக்கருவிகள் நரம்புவாத்தியங்களே அதிகம் இசைக்கப்பட்டன. மேலும் தமிழரின் பாரம்பரிய தனித்துவ வாத்தியங்களான தவில்,நாதஸ்வரம்,மிருதங்கம் உட்பட சித்தார், சாரங்கி, சரோட், எஸ்ராஜ்தில்ரூபா போன்ற ஹிந்துஸ்தானி இசைகருவிகள்,உருமி,தப்பு,பறை,மோர்சிங்,கஞ்சிரா,கடம்,சுத்தமத்தளம், 
கோட்டுவாத்தியம்,முரசு,கொம்பு,புல்லாங்குழல்,மோகன்வீணா,வயலீன்  
ஹார்மோனியம்தபேலா,சாந்தூர், போன்ற பல்வேறுபட்ட இசைகலாச்சாரங்களின் கோர்வையில் இந்நிகழ்ச்சி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இவ் ஓர்கெஸ்ட்ராவில் முதலாவதாக ஹம்சத்வனி ராகம்,ஆதி தாளத்தில் முத்துஸ்வாமி தீட்சிதர் அமைத்த வதாபி கீர்த்தனம் இசைக்கப்பட்டதுஇதற்கான நெறியாள்கையை கலாசூரி அருந்ததி சிறீரங்கனாதன் மேற்கொண்டிருந்தார்.இக்காணொளிகளை இங்கு பார்க்கலாம்.இதற்கடுத்தபடியாக பாஷந் பைரவி ராகம்,த்ரீ தாளத்தில் ஹிந்துஸ்தானி இசை சங்கீத் விசாரட் சோமசிறீ இளசிங்க அவர்களின் நெறியாள்கையின் கீழ் இசைக்கப்பட்டது.அடுத்தபடியாக  நியான் ஹி மால்கர் மற்றும் ராக பஹார் ராகத்தை தழுவி டாக்டர் நிர்மலா குமாரி அவர்களின் இசைநெறிபடுத்தலில் மேலும் ஒரு  ஹிந்துஸ்தானி  இசைகோர்வை வாசிக்கப்பட்டது.அதன் பின்னர் குமார லியனவத்த அவர்களின் நெறியாள்கையில் சிங்கள கிராமிய இசை கருவிகளான கட்டா பெரா,பஹாதரட்ட பெரா,சப்ரகமூவ பெரா போன்றவற்றுடன் கர்நாடக இசைகருவிகளின் கலவையில் சிங்கள கிராமிய இசை வாசிக்கப்பட்டது.மிகவும் வித்யாசமான ஒரு அனுபவமாக இது இருந்தது. மேலும் இறுதியாக  இந்திய ராகங்களின் கோர்வையான  கர்நாடக ராகமாலிகை ஒன்றை கர்நாடக்கிராமிய இசையுடன் கலாசூரி அருந்ததி சிறீரங்கநாதன் அவர்கள்   நெறியாள்கை செய்திருந்தார்.நிகழ்ச்சியின் இறுதியில் பங்களாதேஷ்,பலஸ்தீன்,நோர்வே இசை கலைஞர்களின் இசைநிகழ்வும் நடைபெற்றது.இறுதியாக இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திமுடிக்க காரணமாகவிருந்த அனைத்து கலைஞர்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட பல்வேறு சமுகத்தை ஒன்றிணைக்கும் இசைநிகழ்சிகள் மிகவும் வரவேற்கத்தகது.இந்நிகழ்ச்சியை சிறப்புறநடாத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 இந்நிகழ்ச்சி பற்றிய தகவல் தந்து உதவிய நண்பிக்கு என் நன்றிகள்.


-இவன் இரோஷன்-