15/08/2013

மூன்று மொழி-மூன்று இசை

இசைக்கு மொழியில்லை,நிறமில்லை,மதமில்லை,ஜாதியில்லை.அதுபோல் அதை உணரும் நல்ல ரசிகனும் வேறுபாடுகளை களைந்தவனாகிறான். நல்ல இசைக்கு மொழி தேவையில்லை.இரண்டு செவிகள் போதும். நமக்கு பிடித்த,ரசித்த விசயங்களை அதை ரசிக்கும் நல்ல மனிதர்களுக்கு பகிரும் போது உண்டாகும் பூரிப்பு சொல்லில் அடங்காது. அதே போல நமக்கு பிடித்த நல்ல இசையை பகிர்தலும் இன்பம் தான்.அந்தவகையில் இன்றிலிருந்து வாரம் ஒரு முறை “மூன்று மொழி மூன்று இசை” எனும் தலைப்பில் நான் ரசித்த தமிழ், வேற்றுமொழிப்பாடல்கள் பற்றிப்பகிரலாமென இருக்கிறேன். இந்த பகுதியில் 2 வேற்று மொழிப்பாடல்களும் ஒரு வெளிவராத அல்லது அதிகம் பிரபலமாகாத மிகவும் ரசித்த தமிழ் பாடல் ஒன்றும் அடங்கியிருக்கும். முதலில் தமிழ்பாடல் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.”இஞ்சாதே இஞ்சாதே”-நெடுஞ்சாலை(2013)

பாடியவர்கள்-மதுசிறீ,ரூப்குமார் ரத்தோட்,யாஷின்

பாடல் வரிகள்-மணி அமுதன்.


நான் அறிந்தவரையில் இதுவரைக்கும் ரூப்குமார் ரத்தோட் 3 தமிழ் பாடல்கள் பாடியுள்ளார். அவை மூன்றும் மிக பெரிய ஹிட் மெலோடிகள்.
1.வெண்மதி வெண்மதியே நில்லு
2.ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
3.பூக்கள் பூக்கும் தருணம் அந்த வரிசையில் இந்தப்பாடலும் நிச்சயம் இணைந்துகொள்ளும்.
எங்கேயும் எப்போதும்” ,”பொன்மாலைப்பொழுது” என்று தொடர்ச்சியான ஹிட் ஆல்பங்களை கொடுத்த சத்யாவின் அருமையான இசையில் வெளிவந்திருக்கிறதுரூப்குமாரின் குரலின் வீச்சம்,அதன் குழைவுகள்கேட்டவுடனேயே மயக்கும் தன்மை என்பன இவரின் பாடல்களில் அதிகமாக இருக்கும்.
மதுசிறீயின் குழந்தை தனமான கொஞ்சும் குரல்,யாஷினின் மலையாள வார்த்தை கோலங்கள் என்று மயக்குகிறது. ரூப்குமாரின் குரல் வரும் இடங்கள் அற்புதம். புதிய பாடலாசிரியர் மணி அமுதனின் வரிகளும் அருமை.


ANURAGA VILOCHANANAAYI”-NEELATHTHAAMARA(2009)-MALAYALAM

இசை-வித்யாசாகர்

பாடியவர்கள்-ஸ்ரேயா கோஷல்&ஸ்ரீகுமார்.


யூ ரியூப்பில் உலாவிக்கொண்டிருந்த சமயம் எதேச்சையாக தட்டுப்பட்ட பாடலிது.அதன் பிறகு இந்த பாடலோட மொத்த டீரெய்லும் கலக்ட் பண்ணியாச்சு.முதலில் இந்த மலையாளம் என்ற மொழியை கண்டுபிடிச்சவனுக்கு ஒரு சல்யூட்.மலையாளத்துக்கு “மெலோடியஸ் லாங்க்வேஜ்” அப்டின்னு ஒரு பேர நான் வெச்சுக்கிறன்.எவ்ளோ குழைவான மொழி.
இந்த பாடல் ஒன்றே அதற்கு சாட்சி சொல்லும்.2009 இல் வெளிவந்து கேரளா எங்கும் ஒலித்த பாடலிது.தமிழ் ரசிகர்களுக்கு இடையிடையே நல்ல தமிழ் மெலோடிகளை கொடுத்து விட்டு தலைமறைவாகும் மெலோடி கிங் வித்யாசாகர் தான் இசை.இதே படத்தில் பல்ராம் மற்றும் விஜய்பிரகாஷ் இணைந்து பாடிய PAKALONNU பாடலும் அருமை.
இந்த படத்தை இயக்கியவர் லால் ஜோஸ். இவரின் அனேக படங்களுக்கு வித்யாசாகர் சிறந்த இசை கொடுத்திருப்பார். இந்த படத்துக்கு சிறந்த இசைக்கான பிலிம்பேர் விருதை வித்யாசாகர் பெற்றுக்கொண்டதும் சிறப்பு. அண்மையில் வெளிவந்த “டயமண்ட் நெக்லஸ்” படத்தில் இடம்பெற்ற 
NILA MALARE-NIVAS பாடலும் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த ஒரு அழகான பாடல்.


O RANGREZZ”-BHAAG MILKA BHAAG(2013)-HINDI

இசை-ஷங்கர்,எஷான்,லாய்

பாடியவர்கள்-ஸ்ரேயா கோஷல்,ஜாவிட் பாஷிர்


ங்தே பசந்தி” படத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ராவின் இந்திய தடகள வீரர் மில்க்கா சிங்கின் வாழ்க்கை பற்றிய படம் தான்  
“BHAAG MILKA BHAAG”.இந்த பாடல் நம்ம சங்கர் மகாதேவன்,எஷான்,லாய் கூட்டணியில் செம்மையாக வந்திருக்கிறது.ஸ்ரேயா கோஷல் வழமை போல பின்னியிருக்கிறார்.பாடல் முழுதும் அசல் க்ளாசிக்கல் டச். 
நம்ம மசக்களி சோனம் கபூர்,பர்ஹான் அக்தர் தோன்றும் இந்தப்பாடலின் விஷுவல்ஸும் அப்டி இருக்கும் அண்மையில் வெளிவந்த ஹிந்தி பாடல்களில் மிகவும் பிடித்து போன பாடல்களில் இதுவுமொன்று. வழமையாக ராகேஷின் முன்னய படங்களுக்கு(ரங் தே பசந்தி,டெல்லி-6) தல ரஹ்மான் பிரம்மாண்டமான இசை கொடுத்திருப்பார்.இரண்டு படங்களுக்கும் ரஹ்மானுக்கு பிலிம்பேர் கிடைத்திருந்தது.ஆனால் இந்த படத்துக்கு ஷங்கர் எஷான் லாயை தெரிவு செய்திருந்தார். பாலிவூட்டில் பாடல்கள் சூப்பர் ஹிட். இவரோட அடுத்த படத்துக்கும் இவர்கள் தான் இசையமைக்கிறார்கள்.இதே படத்தில் இடம்பெற்ற ZINDA-BAAG MILKA BHAAG பாடலும் என்னோட பேவரீட்.
ணைந்திருப்போம் நல்ல இசையுடன் மீண்டும் சந்திப்போம்.
-ரோஷன் புவிராஜ்.