14/10/2012

மாற்றானில் என்னதான் இருக்கு???


முன்னமெல்லாம் முதல்சோவுக்கு தியேட்டர் போறப்போ நல்ல படமா இருக்கும்னு எதிர்பார்த்துட்டு போவோம்.ஆனால் இப்பெல்லாம் அப்டி இல்லை.கட்டாயம் மொக்கை படமாதான் இருக்கும்னு நினைச்சிட்டு போக வைச்சுட்டாங்க கடசியா வந்த மிகப்பெரும் வராலாற்று மொக்கை படங்கள்.பெஸ்ட் ஷோ பாக்கல்லன்ன தெய்வக்குத்தமாகிடும் என்ற காரணத்துக்காகாவே  நிறையா ஜீவன்கள் தியேட்டர்ல வர்ற  படம் எல்லாம் பார்த்து படம் முடிந்து வரும்போது கடுப்புடன் திரும்புவது வழக்கமாக போய் விட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க  மாற்றன் பார்க்க ஒரு ஸ்பெசல் காரணம் இருக்கு  அதான் நம்ம “காஜல்” கண்ணு.காஜலோட பருத்த..... ”கண்ணை” தியேட்டர்ல இன்னும் பெருசா பார்க்க போறம்ன நப்பாசை தான் அது(ஐ ஆம் எ குட் பாய் கூல்).

நம்ம பயலுவ “மாற்றான்” படத்தோட ட்ரெய்லர்,போஸ்டர் பார்த்தே சொல்லிட்டாங்க ஏதோ இங்கிலீஷ் பட காப்பி என்று.இப்ப யார் சார் இதெல்லாம் ஜோசிக்கிறது காப்பி அடிச்சாலும் பார்க்க கூடிய படம் வந்தா போதும் சாமி’ன்னு ஆயிடிச்சு இப்போதைய தமிழ் சினிமா நிலமை.நானும் அதே ரகமாயிட்டன்.இதுகெல்லாம்  “சகுனி”,”பில்லா 2”, ”முகமூடி”, ”தாண்டவம்” போன்ற மரணமொக்கைகளே காரணம்.சரி நாலோட அஞ்சா போகட்டும்’ன்னு படத்த பார்த்து முடிச்சுட்டன்.கடசியா வந்த எல்லாப் படங்களுக்கும் விமர்சனம் எழுதலாம்னு ஜோசிச்சுட்டு மனம் இல்லாம விட்டுருவேன்.எழுத ஒன்னும் இல்லை என்பதே காரணம்.(முகமூடி  நண்பர் கேட்டதுக்காக வலைதளம் ஒன்றிற்கு எழுதினேன்).

வந்த படங்கள பத்தி யார் கேட்டாலும் மொக்கை படம்டா பாக்காத’னு சொல்லியே வாய் வலிச்சதால இந்த முறை கொஞ்சம் வித்யாசமா படத்தில இருக்கிற நல்ல மாட்டர்கள் பத்தி மட்டும் சொல்லலாம்னு ஜோசிச்சன்.
(இந்த பதிவு விமர்சனம் அல்ல)அதுக்கு முன்னம் என் பார்வையில் மாற்றான் எப்டின்னு ஒரு வரியில் சொல்றன்.

”நாம போற ரோட்ல நாலு,அஞ்சு மொக்கை பிகருகள் ஒவ்வொரு நாளும்  காணுறம்’னு வைங்களேன்.திடீர்னு ஒரு நாள் அந்த ரோட்டால ஒரு சுமாரான பிகர் க்ராஸ் ஆகிறப்போ ஒரு பீல் வருமே அந்த பீல் தான் மாற்றான் பார்த்து முடிஞ்சு வர்ரப்போ இருந்துச்சு”
(இந்த டயலக்கின் உரிமை என் நண்பன் லவன்’இற்கே சேரும்..)

மாற்றான் கதையில் சிக்கல் இல்லை எனினும் எடுத்துக்கொண்ட கதாபாத்திரம் சிக்கலானது.ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள்.
ஒரு இதயத்தில்  இயங்கும் இரு உடல்கள்.படத்தோட இண்டர்வெல் மட்டும் இரண்டு சூர்யாவும் ஒன்றாகவே இருப்பார்கள். அது வரைக்கும் இரண்டு பாடல்கள்,நீண்ட சண்டைக்காட்சிகள்,காமடி சீன்கள்,லவ் சீன்கள் என்பவற்றை ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களை வைத்து பிரம்மாண்டமாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்கள் (இண்டர்வலுக்கு முன்னய சீன்களை பற்றியே கதைத்துகொண்டு இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்). மாற்றான் குழுவினர் இதற்காக நிறைய உழைத்து இருக்கிறார்கள் .அதற்கு ஒரு சபாஷ்.

12/10/2012

மொக்கைராசுவும் மொக்கை படம் கொடுத்தவர்களும்!!!

(இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.மொக்கை படங்கள் பார்த்து நொந்த என்போன்ற ஜீவன்களுக்கு இது சமர்ப்பணம்.இங்கு லாஜிக் மிஸ்டேக் கண்டுபிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரார்ட், கமரா, ஆக்சன்.................

”மொக்கை போட்டு வாழ்பவர்களே வாழ்வர் மற்றோர் எல்லாம் மொக்கை வாங்கியே சாவர் ”என்ற மொக்கையான தத்துவத்துடன் அல்லார்க்கும் கும்பிடுறன் சாமியோவ் சொல்லுறது அடியேன் மொக்கை ராசு.இது நம்ம எட்டுப்பட்டியிலும் ஒளிபரப்பாகும் ஒரேயொரு  முதல் தர நம்பர் ஒன் அபிமான  மொக்கை டீ.வி இன்  ”மொக்கை ராசுவும் மொக்கை படம் கொடுத்தவர்களும்” நிகழ்ச்சி. அல்லாரும் இந்த அரை மணித்தியாலம் இந்த நிகழ்ச்சிய பார்க்கிறத உறுதிப்படுத்தும் முகமாக  420 எண்ட நம்ம டீ.வீ நம்பருக்கு ஒரு எம்.எஸ் இல்லைன்னா மிஸ்ட் கால் போட்டீங்கன்னா ஒங்களுக்கு 2 ரூபா ரீலோட் கிடைக்கும்.அப்டி ரீலோட் வரலன்ன நம்ம காரியாலயத்துக்கு வந்து பெற்றுசெல்லலாம்.நுழைவுச்சீட்டு 5 ரூபா.

மேலும் மொக்கை போடாம”இப்ப நிகழ்ச்சிக்கு  நேரடியா  போகலாம் இந்தவாரம்  மொக்கை படம் கொடுத்தவர்களில் முதலாம் இடத்தை பெறுகிறார்கள் கடந்த வாரங்களில் வெளிவந்து அனைவரையும் கடுப்பேத்தி பார்ப்பவர்களை தூங்கவைத்த “தாண்டவம்” பட குழுவினர்.குழுவினருடன் பேசலாம்.”


மொக்கைராசு-வணக்கம் விஜய் சார் இந்த படகதைய ஒருக்க சொல்லமுடியுமா?
ஏ.எல்.விஜய்-சார் இந்த படத்தோட டாரக்டரே நான் தான்யா என்கிட்டயேவா?
என்னய்யா காமிடி பண்றாய்?
மொ.ரா-கொய்யால நீ எண்டபடியாதான் கேக்குறன் கதைய சொல்லு?
ஏ.எல்.விஜய்- குட் கொஸ்டியன் இந்த கொஸ்டியன விகரம் சார்கிட்ட நான் பாஸ் பண்ணிக்கிறன்.

11/10/2012

இசைப்புயல் ரஹ்மானும்&பொலிவூட் புயல் ஷாருக் கானும்

இந்திய சினிமா இசையின் கிங் என்று அழைக்கப்படும் ரஹ்மானும் பொலிவூட் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கும்  நீண்ட கால இடைவெளிக்கு பின் இணைந்துள்ள புதிய படம் தான்  யாஷ் சோப்ராவின்”JAB TAK HAI  JAAN".ஷாருக்கை பொறுத்தவரை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு மனிதன்.காரணம் இவரின் அனேக படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு உள்ளன.மேலும் பாடல்களும் தமிழில் மொழி மாற்றம் செய்து ஹிட் ஆகியும் உள்ளன.அது மட்டும் இல்லாமல் ரஹ்மானின் இசையில் தில்சே(உயிரே), ஸ்வதேஷ்(தேசம்) போன்ற பட பாடல்கள் தமிழிலும் மிக பிரபலமானது குறிப்பிடவேண்டிய விடயம்.இதுவரை ரஹ்மானும் ஷாருக்கும் இணைந்த படங்கள் பாடல்களும் சரி படமும் சரி மிகவும் பிரபலமானவை அவை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

09/10/2012

மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்




இவ்வுலகில்எத்தனையோ மனிதர்கள் தோன்றி மறைகின்றனர். இருப்பினும் மறைந்தபின்னும் இவ்வுலகில் மக்கள் மனதில் வாழ்பவர்கள்ஒரு சிலரே.அவர்கள் இவ்வுலகிற்கு விட்டுச்சென்ற எச்சங்கள் என்றும் அவர்களைநினைவுபடுத்திக்கொண்டு இருக்கும்.இந்த வகையில் ஈழத்திலே பிறந்து ஈழத்திலே வாழ்ந்து சாதனைபல செய்து விருதுகள் பல வாங்கி எம் மண்ணின் பெருமையை உலகறியச்செய்த நான் நேரில் கண்ட என் அன்னையின் ஊரில் பிறந்த ஒரு  மகான் ஒருவரைபற்றி எனது முதல் பதிவில் பகிர்வதில் பெருமையடைக்கின்றேன்.வீரமணி ஐயர் அவர்கள்.
நேற்றுமுன்தினம் (08.10.2012) அவர்களின் ஒன்பதாவது நினைவு தினமாகும்.மகாவித்வான் நினைவாக இந்த பதிவை பகிர்கின்றேன்.

வாழ்க்கை வரலாறு

இவரைபற்றி  நீண்ட அறிமுகம் தேவையில்லை.பலர் அறிந்து இருப்பார்கள்.சிலர்இவரை அறியாமலிருப்பினும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது இவரின் பாடல்களை கேட்டு இருப்பார்கள்.பாடியிருப்பார்கள். எனினும் நான் மகான் பற்றி படித்தஅவர் இல்லத்தில் கேட்டறிந்த சில தகவல்களை பகிர்கிறேன்.ஈழத்திருநாட்டில் தமிழ்  கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும்  இணுவிலில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி பிரபல வயலின் வித்துவான் நடராஜ ஐயர் அவர்களுக்கு இரண்டாவது புதல்வனாக பிறந்தார்.இவரின் இயற்பெயர் சப்தரிசிசர்மா.இளமையிலே கலையில் ஆர்வம் கொண்ட ஒரு குறும்பான,துடிதுடிப்பான மனிதராக காணப்பட்டார்.


தனது இளமைக்கல்வியை இணுவில் இந்துக்கல்லூரியிலும் உயர்கல்வியை மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் பயின்றார்.பாடசாலைகாலங்களிலே பல கலைநிகழ்ச்சிகள் செய்து வந்தார்.மனோகரா என்னும் நாட்டிய நாடகத்தில் பெண்வேடமிட்டு நடனமாடி அனைவருக்கும் கலாவிருந்து அழித்தார். பாடசாலைக்கலத்தில் சிறந்தமாணவன் விருதை பெற்றார்.
பெண்வேடத்தில்

தொடர்ந்து தனது மேற்படிப்பிற்காக இந்தியா சென்றார்.அங்கு தென்னிந்திய கலாச்சேத்திர நடனப்பள்ளியில் பரதம் கற்றார்.இசையை எம்.டீ.ராமனாத ஐயரிடமும் பிரபல இசைமேதை,இசையமைப்பாளர் பாபநாசம் சிவன் அவர்களிடமும் கற்றார்.ருக்மணிதேவி அருண்டேல் அவர்களிடம் நடனம் கற்றார்.இந்தியாவில் கற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தான் இவரது கலைவாழ்வில் பெரும் திருப்புமுனையான சம்பவம் நடந்தது.திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயம் மீது “மயிலைக்குறவஞ்சி” பாடினார்.


கபாலீஸ்வரரை தலைவராகவும் கற்பகாம்பாளை தலைவியாகவும் வைத்து பாடிய நூலின் முதல் பாடல்`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்..” என்ற பாடல் இவருக்கு பெரும் உலக புகழை ஈட்டித்தந்தது.ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த இந்த இராகமாலிகை கீர்த்தனையை பிரபல தென்னிந்திய பாடகர் செளந்தரராஜன் அவர்கள் பாடினார்.இப்பாடல் வெளியீட்டில் தென்னிந்தியாவின் பிரபல இசைமேதைகள் மகானை பாராட்டி வாழ்த்தினர். பாபநாசம் சிவன் அவர்கள் இவ்வாறு பாராட்டை தெரிவித்தார் “மயிலை குறவஞ்சி” எனும் சிறிய நூலை இழைத்த அற்புத சிலந்தி நமது வீரமணி”. ஆலய நிர்வாகத்தினர் இப்பாடலை ஆலய கருங்கல்லில் “இப்பாடலை எழுதியவர் யாழ் மண்ணை சேர்ந்த வீரமணி ஐயர்” என இட்டனர். அன்று யாழ்மண்ணின் புகழ் தென்னிந்தியா முழுதும் இப்பாடல் மூலம் ஒலித்தது. இன்று இவ்வாலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கானோர் இப்பாடலை பார்வையிட்டும் பாடியும் வருகின்றனர்.