28/11/2012

நண்பேண்டா-ஒரு காதல் கதை


(இது  ஒரு கற்பனைக்கதையே ஆகும்.யார் மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல.சிரிக்கவைத்து  உங்கள் வயிற்றை புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது)


”இப்பிடித்தான் கபிலன் எண்டு ஒரு பயல் மானிப்பாய்ல இருந்தான்.அவன் ஏ.எல் படிக்கிற டைம் 2008 ஆம் ஆண்டு இருக்கும் பையன் ஐஸ்வர்யா எண்ட பொண்ண லவ்விட்டு இருந்தான்.பஸ்ஸில ஸ்கூல்லுக்கு போற டைம் இவண்ட ஹீரோயிசத்துக்கு அளவே இல்ல.பஸ் புட்போல்ட  பிரன்ஸோட தொங்கிட்டு  கைவலிக்க இவன் என்ன செய்வான் எண்டா யன்னல் வழியா ஐஸுவ லுக்குவிட்டபடி “வழையோசை கல கலவென” பாடலை கேவலமா ஹம் பண்ணிட்டு இருப்பான்.முதலில் ஒன் சைட்டா இருந்த லவ் அப்புறம் டூ சைட் ஆகி இவங்க ரெண்டு பேரோட போறவங்க,வாறவங்க சூசைட் பண்ணாத குறையா லவ் பண்ணினாங்கள்.


அப்ப தான் ஒரு ஹேப்பியான சம்பவம் நடந்துச்சு.ஒரு லவ்லீ டே தன்னோட பாங்கர் அப்பாக்கு ட்ரான்சராகினபடியாலா  ஐஸ்வர்யா கபிலனுக்கு டாட்டா காட்டிட்டு அவங்க  குடும்பத்தோட கொழும்புக்கு போய்ட்டு.போற டைம் அண்ணனுக்கும் ஐஸ்ஸுக்கும் சின்ன ஊடல்கள்.பி காஸ் அண்ணன் பார்க்க ஸ்டைலா இருந்தாலும் மொக்கைதனமா பேசுவான்.குரங்குச்சேட்டைகள் எண்டா அவ்வளவு பிரியம் அவனுக்கு.கடசி டைம்ல இவண்ட  குரங்குத்தனமான பேச்சை எண்ணி.  ஐஸ் ரெம்ப கவலையா இருக்கும்  ரெம்ப நேர திங்கிங்கு பிறகு ஐஸு ஒரு முடிவுக்கு வந்துது.இவனோட இருந்தா சரிவராது.பேசாம அண்ணன கழட்டி விடுவம். எண்டுட்டு போன் நம்பர் எல்லாத்தையும் மாத்திட்டு நிம்மதியா கொழும்பில வாழ்ந்து வந்துச்சு.

அண்ணன்(கபிலன்)  ஐஸு பிரிஞ்சத எண்ணி ஒரே சோக பாட்டு கேக்க தொடங்கினான்.”ஊர் சண்டைல ஊறுகாய் நக்கும்”நிகழ்ச்ச்சிகளில தனது சோககதைகள போன் பண்ணி சொன்னான்.இத எல்லாம் கேட்டு ஐஸு தனக்கு கிடைப்பாள் எண்டு முரட்டு தனமா நம்பினான்.இரவு குரூப் ஸ்ரடி எண்டு தண்ட பிரண்ஸ வீட்ட கூப்பிட்டு அவங்கட காதால ரத்தம் வாற அளவுக்கு சோககதைகளயும் மொக்கை கவிதைகளையும் சொல்லி சாவடித்தான்.ஏ.எல்லும் வந்துச்சு எதிர்பார்த்தபடியே ரிசல்ஸும் கேவலமா வந்துச்சு.கொஞ்ச காலம் போக அண்ணனும் ஐஸுவ மறந்துட்டு மானிப்பாய் சந்தி,பிரபல ரியூசன் வாசல்களில் எளிமை இசை இயக்கம் ஆற்றதொடங்கினார். ஆனா ஒரு துண்டும் சிக்கல்ல.இப்டியே ஒரு பொண்ணு பார்த்து சிரிக்கும் அப்புறம் பிரன்ஸ்கிட்ட கேட்ட அது எல்லாரையும் பார்த்து சிரிக்குது மச்சி எண்டு சொல்ல அண்ணன் சோகமாகுறதும் நாளும் பொழுதும் நடந்துச்சு.


இதுக்கிடைல அண்ணன் ஐஸுவ முழுசா மறந்துட்டார். ஜாலியா லைஃப என்சாய் பண்ணிட்டு கண்டினியூ பண்ற டைம் தான் “விண்ணைத்தாண்டி வருவாயா” படம் வந்துச்சு.
அந்த படம் பார்த்து ”மச்சி என்னோட கதைடா” எண்டு சொல்லாத ஆக்களே இல்லை எண்டு சொல்லலாம்.ஏன் எண்டா  அவன் கூட சேர்ந்த எல்லா பயலுகளுக்கும் லவ் ஃபெய்லீயர். ஆனா அண்ணனுக்கு கொஞ்சம் ஸ்பெசல் செட் ஆகி அப்புறம் ஃபெய்லீயர் ஆனதால படம் ரெம்பவே பாதிச்சுட்டுது.பழைய லவ் மெமரீஸ தூசு தட்டி எழுப்பி டான்ஸ்வேற ஆட்வச்சுது. அண்ணன் படத்ல வர்ர சிம்பு போல தன்னை இமாஜீன் பண்ணிட்டு கொழும்புக்கு ஐஸுவ தேடிபோக ரெடி ஆனார்.இவன் கூட இருக்கிற பிரண்ஸும் நல்லா உசுப்பிவிட்டங்க.”மச்சி வெள்ளவத்த சின்ன இடம் நாலு கோயில் 10 ரியூசன் 15 உடுப்புகடை இதுக்க மாறிமாறி ஏறி இறங்கினா அங்க எங்கயாச்சும் தான் ஐஸு இருப்பா போ மச்சி வெற்றியோட திரும்பிவா ”எண்டு சொல்லி வழி அனுப்பிவைச்சாங்க.

அந்த டைம் இவண்ட அப்பா&அம்மா இந்தியா போயிருந்திச்சினம்.வீட்டில மானிப்பாயே முழுசா தெரியாத அவண்ட அப்பாவி அப்பப்பா தான் இவனோட இருந்தார்.இவன் நைஸா ”அப்பப்பா தெகிவள சூக்கு பிரண்சேட போகப்போறன் சூ முழுசா சுத்தி முடிக்க ஒரு கிழமை ஆகும்.கட்டாயம் போகோணும் கெமிஸ்ட்ரி பாடமும் அதில சம்பந்தபடுது ”எண்டு பொய் சொல்லி காசுவாங்கிட்டு பிரயாணமானான். கொழும்பு வந்து இறங்கினபோது தான் ஒண்டு நினைவுக்கு வந்துது.ஐஸ்ஸுக்கு டான்ஸ் எண்டா உசிர் எண்டு பேசேக்கையே இமைய அசைச்சு கைவிரல்கள குவித்து விரித்து பேசுவா எப்டியோ உங்க வந்தும் டான்ஸ் பழகுவாள் எண்ட ஊகத்தில டான்ஸ் கிளாஸ் நடக்கிற இடமா தேடி போய் 2 நாளுக்கு பிறகு ஒரு சந்தில ஐஸுவ கண்டுட்டான்.அப்புறம் என்ன ஐஸு அப்டியே ஷாக் ஆகி நிக்க அண்ணன் ”ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே” எண்டு ஹம் பண்ண ஒரு கேவலமான ரெமான்ஸே ரெண்டு நிமிசம் போய்கொண்டு இருந்துச்சு.இவன கண்டதும் ஐஸூ தெரியாதவள் போல நழுவி போக பாக்க அண்ணன் தாங்கள் லெளகீக நாட்களில் இருந்த லவ் லெட்டர்ஸ காட்டி ஐஸுவுக்கு ஷாக் கொடுத்தான்.

”உலகத்திலயே பாக்ககூடாது எண்டு நினைச்ச மொக்க படத்த லோங் ட்ரிப் பஸ்ல போகும் போது  பாக்கேக்க எப்டி ஒரு பீல் வருமோ அப்டி இருந்துச்சு” ஐஸுக்கு.கொஞ்சநேரம் சுதாகரிச்சுப் போட்டு சொன்னா” இங்க பாரும்  எனக்கு செட் ஆயிட்டு.ஒரு ஆள் இருக்கிறார்.கொழும்பில தான் இருக்கிறார். 2 வருச லவ்.உம்மள போல இல்ல அவர் நல்லா பேசுவார்.அவர தான் கலியாணம் செய்யபோறன்.பழைய கதைகள பேசி நேரமில்ல.எது வேணும் எண்டாலும் அவரோட கதையும் இந்தாரும் அவரோட போன் நம்பர் ”எண்டுட்டு சட்டு புட்டு எண்டு பேசிட்டு ஐஸு போயிட்டு.அந்த டைம் பார்த்து மழைவேற வந்துட்டு.அண்ணனிட்ட குடை இருந்துச்சு ஆனா பிடிக்கல்ல.பீல் பண்றதுக்காக மழைல நனைஞ்சுட்டே சோகம ரூமுக்கு கிழம்பினார்.

அங்க இருந்து வடிவா அழுது முடிச்சுட்டு.வழமையா பெடியங்கள் பண்றபோல தண்ட சோகத்த பிரண்ஸுக்கு சொல்லி புலம்பினான்.இவங்க சும்மா இருந்தாங்களா?மச்சி கவலபடாதடா அவண்டா போன் நம்பர் இருக்கு தானே அவனோட போய் கதைடா என்ன பிரச்சனை வந்தாலும் நாங்க இருக்கிறமடா.கொழும்பில என்னோட நேர்சரில படிச்ச இரோசன் ஏரியா ரவுடியா இருக்கான் என்ன பிரச்சனை எண்டாலும் அவன் வருவான். நீ போய் கதை மச்சி எண்டு உணர்ச்சி வசப்பட்டு பேச அண்ணன் கண் சிவந்து ஆக்ரோசத்தோட புறப்பட்டார்.

கபிலன் ஐஸுவோட பிரசண்ட் லவ்வருக்கு கோல் பண்ணினான். அவனும் தன்மையா கதைச்சான்.
கொஞ்சநேரம் பேசினதுக்கு பிறகு நல்லதா நடக்கோணும் எண்டு வேண்டிட்டு அவன சந்திக்கிறதுக்கு வெளிக்கிட்டு பம்பலப்பிட்டி கோயிலடிக்கு போனான் .அங்க இருந்து கோல் பண்ண ”ப்ரதர் எங்க நிக்கிறீங்க நான் பச்சை சேட்டும் சிவப்பு ரவுசரும் போட்டுட்டு கோல் ரோட்டில நிக்கிறன்”எண்டான்.”ஓகே பக்கதில ஒரு ஒழுங்கை இருக்கு அங்க வாங்கோ” எண்டு சொல்ல போனான் கபிலன்.”நேர போய் வலப்பக்கம் திரும்ப ஒரு ஜிம் வரும் அங்க வாங்கோ” எண்டு சொல் வயித்த கலக்க தொடங்கிட்டு.எண்டாலும் அடக்கிப்போட்டு போனான்.

அங்க சிக்ஸ்பேக் ஓட ஒரு உருவம் இவன் முன்னால வந்து நிண்டுச்சு நான் தான் நீங்க தேடின ஆள் என்ன விசயம் எண்டு கேக்க இவன் “எல்லா விசயத்தையும் உளறிக்கொட்டிட்டு.ஐஸுவ நான் லவ் பண்றன் அவள் எனக்கு தந்த லவ் லெட்டர்,கிரீட்டிங்ஸ் இருக்கு.நீங்க அவள விட்ட்ட்ட்ட்ட்ட் ட்ட்ட்ட்ட்டூடுடுடுடு. ....................... ”என்று சொல்லி முடிக்கிறதுக்கிடைல சபேசனுக்கு எல்லாம் ஒரே இருட்டா போச்சுது.ரவுசரும் ஈரமாகிட்டுது.மூக்கு கொஞ்சம் உடைஞ்சும்,ரெண்டு பல்லு மட்டும் விழுந்தும்,கன்னம் கொஞ்சம் வீங்கியும் குருதிப்புனல் கமல்ஹாசன் போல ஒரே ஓட்டமா யாழ்பாணம் வந்து சேர்ந்துட்டான்.அதே கேவலாமா கெட் அப்ல ஊருக்கு வந்ததும் இல்லாம தண்ட மொக்க பிரண்ஸ கூப்பிட்டு மீட்டிங் போட்டு தண்ட கதைய சொல்லி கிளைமாக்ஸ் சொல்லி முடிக்க எல்லார்ட கண்ணிலயும் மரணபீதி. அதுல தான் ரெண்டு குத்துவிட்டதாயும் அவன் ஆக்களோட அடிச்சதால தான் சமாளிக்கேலாம போச்சு எண்டும் சொல்லி பிட்டுகளும் போட்டான். ஒரு நிமிசம் எல்லாம் மயான அமைதி.கபிலன்  மீண்டும் பேசத்தொடங்கினான் “மச்சி என்ன பண்ணலாம் மச்சி சொல்லுங்கடா அவன என்ன பண்ணாலாம்?.ஐஸூவ என்ன பண்ணலாம்?.அசிங்கமாப்போச்சுடா ”எண்டு இதுவரைக்கும் அசிங்கப்படதவன் போல சொன்னான்.சில நிமிட அமைதி.

கொஞ்சம் உரத்த குரலிலமீண்டும் ”மச்சி ஏண்டா பேசாம இருக்குறீங்க என்ன பண்ணலாம் சொல்லுங்கடா? நான் என்ன பண்ண இப்ப?” எண்டு கேட்டான்.

எல்லாரும் முகத்தை கீழ வைச்சுக்கொண்டு ஒருத்தரஒருத்தர் முழிச்சு பார்த்துட்டு
அமைதியான  கோரஸா  “வா மச்சான் மருந்தெடுப்பம்”

எண்டு சொல்லிட்டு சத்தமில்லாமல் குனிஞ்சபடியே மெதுவாக கிளம்பினார்கள்.


                                                              முற்றும்

****************************************************************


இந்த கதைல என்ன மெசேஜ் இருக்கு எண்டு கேக்குறது என்னோட ஏழாம் அறிவுக்கு விளங்குது நாங்க இவ்வளவு நாளா பட்ட அனுபவத்த வச்சு சொல்லுறன் கேளுங்க.1.காதலை பொறுத்தவரை மிகச்சிறந்த உளவியல் விசயம் என்ன எண்டா அதன் போக்கிலே விட்டுவிடு என்கிறது தான் ஒரு பொண்ணு நம்மள தேடி நமக்கு ஏத்தமாரி வந்துச்சா செட் ஆக்கி வைச்சுக் கொள்ளணும். அதே பொண்ணு போச்சுதா அப்டியே விட்டுடணும்.மேல புதுசா ட்ரை பண்ணினால் குருதிபுனல் கமலும்,சேது விகரமும் தான் மிஞ்சும்.

2.ரெண்டாவது இந்த பொடியங்கள் கெடுறதுக்கு முக்கியகாரணம் இந்த காதல் படங்கள்.அந்த படத்தில வாற கதையை தங்கட கதை எண்டும் என்ன தான் இவங்க மொக்கையா இருந்தாலும் பட்த்தில வாற  ஹீரோவா தன்னையும் ஹீரோயினாய் தண்ட பிகரையும் நினைச்சுகொள்ளுறது.அதுக்கபிறகு பட்த்திலவாறமாரி லாஜிக்கே இல்லாம அப்ரோச் பண்றது.ஒண்டு சொல்லுறன் இந்த படங்கள் எல்லாருக்கும் பிடிக்கோணும் எண்ட்துக்காக எழுதுறது. ஆனா நாங்க பண்ற காதல் நாங்க லவ் பண்ற பொண்ணுக்கு பிடிக்கணும்.அதன் வழில தான் போகோணும்.சோ உங்கள் ஹீரோவா நினைக்கிறத விட்டுத்தள்ளுங்க.

3.இன்னும் நிறைய இருக்கு அதுல ரெம்ப அலேர்ட்டா இருக்கவேண்டிய  ஒண்டு ஆனா இது தான் முக்கியமான மாட்டர் சொல்லப்போறன்.அவங்க தான் இந்த நண்பர்கள்.ஒரு பொண்ணோட சாதாரண பார்வையை காதல் எண்டி நாங்க நினைக்க காரணம் இந்த பிரண்ஸ் தான்.உசுப்பியே லவ் பண்ண வைச்சுடுவாங்க.ஐஸ்வர்யா என்ன ஐஸ்வர்யா ராய் கூட வந்தாலே மச்சி உனக்கு அணையும்டா நான் இருக்கன் எண்டுவாங்க.முக்கியமான டைம் வர்றப்போ மச்சி கொஞ்சம் பிரச்சனை தாண்டா அவள்.வேற ஆள பாருடா எண்டு சொல்லி இன்னொரு குழிக்குள்ள தள்ளிவிடபாப்பாங்க.காதல் என்ற விசயத்தில நண்பர்கள் எப்போது பாசிட்டிவா தான் பேசுவாங்க.சோ அதெல்லாம் உண்மை எண்டு நினைச்சு மாதவன் ரேஞ்சில டயலக் விட்டு செருப்படி வாங்குறத தவிர்த்து கொள்ளுங்க நண்பர்களே.

சரி ஏதோ நிறைய பேசுறானே ரெம்பவே அடிபட்டு இருப்பான் எண்டு நீங்க ஜோசிப்பீங்க.அதான் முன்னமே சொல்லி இருக்கிறன் எல்லாம் கற்பனை எண்டு.தேவையில்லாதத குழப்பிக்கொள்ளாம நல்ல பொண்ணா பிடியுங்கள் நலமாக வாழுங்கள்.பெண்களுக்கு இத சொல்லிக்கொள்ளுறன்.

இவன் இடியட் இரோஷ்