11/10/2012

இசைப்புயல் ரஹ்மானும்&பொலிவூட் புயல் ஷாருக் கானும்

இந்திய சினிமா இசையின் கிங் என்று அழைக்கப்படும் ரஹ்மானும் பொலிவூட் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கும்  நீண்ட கால இடைவெளிக்கு பின் இணைந்துள்ள புதிய படம் தான்  யாஷ் சோப்ராவின்”JAB TAK HAI  JAAN".ஷாருக்கை பொறுத்தவரை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு மனிதன்.காரணம் இவரின் அனேக படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு உள்ளன.மேலும் பாடல்களும் தமிழில் மொழி மாற்றம் செய்து ஹிட் ஆகியும் உள்ளன.அது மட்டும் இல்லாமல் ரஹ்மானின் இசையில் தில்சே(உயிரே), ஸ்வதேஷ்(தேசம்) போன்ற பட பாடல்கள் தமிழிலும் மிக பிரபலமானது குறிப்பிடவேண்டிய விடயம்.இதுவரை ரஹ்மானும் ஷாருக்கும் இணைந்த படங்கள் பாடல்களும் சரி படமும் சரி மிகவும் பிரபலமானவை அவை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.



இந்த இருவரும் 4 படங்களில் இணைந்துள்ளனர். தில்சே(உயிரே),ஸ்வதேஷ்(தேசம்),One 2 Ka 4 போன்ற படங்களில் ஷாருக் முக்கிய பாத்திரத்திலும் சாத்தியா(அலைபாயுதே) இல் கெளரவ தோற்றத்திலும் நடித்து இருப்பார்.


ரஹ்மான்&ஷாருக் கூட்டணி என்றால் அனேகருக்கு முதலில் நினைவு வருவது “உயிரே” அதாவது “தில்சே” படம் தான்.மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்ட பாடல்கள் அமைந்த திரைப்படம். ஒரு அழகான காதல் கதையையை தீவிரவாதம்+அரசியல் பின்னணியில் மணி அழகாக சொல்லி இருப்பார் ரஹ்மானின் இசையுடன்.இதன் தமிழ்பாடல்கள் சரி ஹிந்தி பாடல்கள் சரி அந்தக்காலத்தில் எந்த மூலையிலும் ஒலித்தது.

பூங்காற்றிலே(AJNABI),தைய தையா(CHAIYA CHAIYA),என் உயிரே(SATRANGI RE),நெஞ்சினிலே நெஞ்சினிலே(JIYA JALE),இரு பூக்கள்(DILSERE), போன்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை கட்டிப்போட்டன.குறிப்பாக தைய தையா(CHAIYA CHAIYA) பாடல் சுக்வீந்தர் சிங் என்னும் இளைஞனை உலகம் பூரகவும் இனம் காட்டியது.இப்பாடல் உலகத்தின் மிகச்சிறந்த தலைசிறந்த 10 பாடல்களில் ஒன்றாக BBC தெரிவு செய்தது மிகப்பெரிய சதனையாகும்.அத்தோடு மட்டும் இல்லாமல் சுக்வீந்தர் சிங் இப்பாடல் பாடியதற்கு FILMFARE விருது பெற்றார்.இவர் தான் பின் ரஹ்மானின் ஆஸ்கார் பாடல்”ஜெய் கோ”வையும் பாடியது என்பது குறிப்பிடத்தக்கது.எனக்கு இந்த் ஆல்பத்தில் மிகவும் பிடித்த பாடல் என்றால் ரஹ்மான் பாடிய “இருபூக்கள்”(DILSERE).ஏனெனில் ரஹ்மானின் குரலும் பின்னணி இசையும் பிரமாண்டம். இலகுவாக எவராலும் பாடமுடியாத உணர்வு பூர்வமான பாடல்.இத்திரைப்படத்தின் பின்னணி இசையும் வெகுவாக பேசப்பட்டது.குறிப்பாக அந்த பாலைவனத்தில் மனீஷாவும்,ஷாருக்கும் பேசிக்கொண்டு சண்டை போடும் காட்சிகளில் பின்னணி இசை அபாரம்.ரஹ்மானுக்கு இத்திரைப்படத்துக்காக FILMFARE விருது கிடைத்தது.

அடுத்தது ASHTHOSH GOWARIKER லகான் படத்துக்கு பின் இயக்கிய ஸ்வதேஷ்(தேசம்) திரைப்படம்.
ஒரு  சமுகப்பிரச்சனையை வெளிநாட்டிலிருந்து வரும் விஞ்ஞானி இளைஞன் தீர்க்கப்போரடும் ஒரு கதையம்சமுள்ள திரைப்படம்.இத்திரைப்படம் மிகச்சிறந்த விமர்சனத்தை பெற்றது.
இத்திரைப்படப்பாடல்கள் தமிழில் வெளிவந்திருப்பினும் படம் தமிழில் வெளிவரவில்லை.மிகவும் உணர்வு பூர்வமான பாடல்களை தந்திருப்பார் இசைப்புயல்.

காவிரியா காவிரியா(SAAWARYA SAAWARYA),உன் தேசத்தின் குரல்( YEH JO DES HAI TERA),மழைமேக வண்ணா(PAL PAL HEY BARI),தாய் சொன்ன தாலாட்டு(AAHISTA AAHISTA),உன்னைக்கேளாய்(YUN HI CHAL),தீனானா மூனானா(YEH THARA VO THARA),கேட்டேனே உன்னை(DEKHO NA).
உயிரே(தில்சே) பாடல்களை விட என்னை மிகவும் கவர்ந்தவை ஸ்வதேஷ்(தேசம்)பாடல்களே. ரஹ்மான் பாடிய “உன் தேசத்தின் குரல்” பாடல் நமக்காகவே எழுதியது போல இருக்கும்.2005 சுனாமி அனர்த்தத்தில் அனேகர் பலியாயினர் வானொலி(சக்தி எஃப் எம்)இல் இந்த பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள்.இந்தபாடலை கேட்கும் போது சுனாமியில் பலியான அப்பாவி மக்கள் நினைவுகள் அலைமோதும்.மழைமேக வண்ணா பாடலும் மிகவும் பிடித்தது.

இந்த திரைப்படத்திலே மிகவும் பிடித்த பாடல் “தாய் சொன்ன தாலாட்டு” என்ற பாடல் காந்தக்குரலோன் ஜேசுதாஸ் தனது மயக்கும் குரலில் தாலாட்டி இருப்பார் பாடகி மதுசிறீயுடன்.அனேகருக்கு தெரிந்திராதபாடல் இது ரஹ்மான் இசையில் வந்த தாலாட்டு அதுவும் தந்தை பாடும் தாலாட்டு.
“கண்கள் வானம் கடதாசி போட்டால் வாராது தூக்கம் ஏலேலோ பொட்டு இசைபாட்டு கேட்ட அது வந்து சேரும்” என்று பெண்குரல் பாடத்தொடங்க அப்டியே மனமும் உயிரும் உருகி லயித்துவிடும்.நான் அடிக்கடி நண்பர்களுக்கு பரிந்துரைக்கும் பாடல் இது.பாடலை கேட்க இந்த லிங்கை க்லிக் செய்யுங்கள்.
http://www.youtube.com/watch?v=hifIP4nn0xI

மேலும் இந்த படத்தின் ஹிந்திப்பதிப்பு பார்த்தேன் மிகவும் அழகான படம்.பின்னணி இசையிலும் ரஹ்மான் பின்னியிருப்பார்.சிறந்த பின்னணி இசைக்கான FILMFARE விருது கிடைத்தது ரஹ்மானுக்கு.
YEH THARA VO THARA பாடலுக்காக உதித் நாராயணுக்கு தேசிய விருது கிடைத்தது.

இவற்றை தவிர One 2 Ka 4 படத்திலும் அழகான இசையை கொடுத்து இருப்பார்.
"I Am Sorry","Osaka Muraiya","Sona Nahin Na Sahi" போன்ற பாடகள் பிரபலம். இருப்பினும் படம் தோல்வி அடைந்ததால் மேற்கூறிய படங்கள் அளவிற்கு  பாடல்கள் மிகப்பெரிய ஹிட் என்று இல்லை.அடுத்ததாக  சாத்தியா(அலைபாயுதே) இத்திரைப்படத்தில் விவேக் ஓபராய் முக்கிய பாத்திரத்திலும் ஷாருக் கெளரதோற்றத்திலும் நடித்திருப்பர்.பாடல்கள் சொல்லவே தேவையில்லை மெகா ஹிட்..ஷாருக் சிறிய கட்டத்து வந்து இருப்பினும் இந்த படத்துக்கும் FILMFARE விருது கிடைத்தது ரஹ்மானுக்கு.


ஸ்வதேஷ்’க்கு பிறகு நீண்டகாலத்துக்கு பின் ”JAB TAK  HAI JAAN” பாடல்கள் வெளிவந்து மிகவும் பிரபலமாகியுள்ளன.ரஹ்மான் அவர்கள் தமிழில் கடைசியாக எந்திரன் படத்துக்கும் அதன் பின் ரன்பீர் கபூர் நடித்து இம்தியாஸ் அலி இயக்கத்தில் வந்த“ROCK STAR"ற்கு இசையமைத்திருந்தார்.
ROCK STAR"ற்கு சிறந்த இசைக்கான FILMFARE விருது கிடைத்தது அனேக பாடல்களை "MOHIT CHAUHAN"பாடியிருப்பார்.பாடல்கள் அனேகமானவை   ROCK பாணியில் இடம்பெற்று இருக்கும்.TOP CHART 'இல் கலக்கின.அதற்கு பிறகு சரியாக ஒரு வருசம் கழித்து JAB TAK JAAN பாடல்கள் வந்துள்ளன.மொத்தம் 9 TRACKS இடம்பெற்றுள்ளன.அது பற்றி ஒரு சிறு விபரத்தை தருகிறேன்.

”CHALLA”-RABBI
”SAANS”-SHREYA KOSHAL&MOHIT CHAUHAN
”ISHQ SHAVA”-RAGAV MATHUR&SHILPA RAO
"HEER"-HARSHDEEP KAUR
"JIYA RE"-NEETI MOHAN
"JAB TAK HAI JAAN"-JAVED ALI&SHAKTHISREE KOPALAN.
"SAANS(REPRISE)"-SHREYA KOSHAL
"ISHQ DANCE"-INSTRUMENTAL
"JAB TAK HAI JAAN(POEM)"-SHAH RUKH KHAN
பாடல்கள் வெளிவந்த நாளிலிருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.அனைத்து பாடல்களும் ரஹ்மானின் வாசனை.குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்தது ”SAANS” என்ற பாடல் ஸ்ரேயாகோஷல் மற்றும் ரஹ்மான் தற்போது அதிகம் தனது பாடல்களில் பாவிக்கும் மோகிற் சோஹான் இணைந்து பாடியுள்ளனர்.பாடல் ஆரம்ப இசை வயலீன் ஓர்கெஸ்ட்ராவில் ஆரம்பித்து ஸ்ரேயாகோஷலில் மெல்லிய குரலில் SAANS ME TERE என்று ஆரம்பிக்கும்.INTERLUDE CHORUS உடன் வந்து பாடலை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது.இதே பாடலின் மறு பதிப்பு ஸ்ரேயாகோஷலின் குரலில் சோகம் இழையோட 2 நிமிடபாடலாக உள்ளது.

JAB TAK HAI JAAN" இப்பாடல் அடுத்தபடியாக பிடித்தது.ஜாவிட் அலியின் குரல் இப்பாடலில் மிக அருமை. பாடல் ஆரம்பித்து சில நேரத்தின் பின் தபேலா பின்னணியுடன் செல்வது அழகு.இப்பாடலை கேட்கும் போது ஷாருக் பாடல் என்று சொல்லிவிடலாம் அப்படி ஒன்றிய இசை."JAB TAK HAI JAAN(POEM)" ஷாருக்கின் குரலில் வரும் மொழி புரியாவிடினும் இந்த கவிதைக்கு ரஹ்மானின் பின்னணி அபாரம்.வீடியோவில் இன்னும் அருமையாக இருக்கும் என்பது கேட்கும் போதே புரிகிறது.இவற்றை தவிர ”CHALLA” பாடல் கிட்டார் பின்னணியில் கலக்கல்.”ISHQ SHAVA” பாடல் CLUB SONG ரகத்தில் அமைந்து இருக்கிறது.
ஆனால் பாடலில் ரஹ்மானின் பழைய பாடல்களான "ISHQ ADA HEY","ROCK STAR" பாடல்களின் சாயல்."HEER","JIYA RE" பாடல்கள் கேட்ககூடிய ரகம்."ISHQ DANCE"-INSTRUMENTAL ஆட்டம் போட வைக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது புதிய பாடல்கள் மூலம் ரசிகர்களை ஏமாற்றாமல் நல்ல ஒரு இசை ஆல்பத்தை ரஹ்மான் கொடுத்து இருக்கிறார்.நிச்சயமாக இப்பாடல்களுக்கும் விருதுகள் நிச்சயம்.
யாஷ் சோப்ராவுடன் இசைபுயல்
மொத்தத்தில் பார்ப்போமானால் ஷாருக்குடன் ரஹ்மான் இணைந்த 4 படங்களில் 3 படங்களுக்கு FILMFARE விருது பெற்றமை சிறப்பு.மேலும் ரஹ்மானின் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை “தில்சே” ஷாருக்கின் படம் ஆகும்.எனவே இந்த இரண்டு பேரும் இணைந்தால் கலக்கல் இசைபிரவாகம் என்பதில் ஐயமில்லை.

பாடல்கள் பற்றி சொல்லியாச்சு இனி படம் வந்தபின் தான் படத்தை பற்றி சொல்லலாம்.ரஹ்மான்&ஷாருக் கூட்டணி ரசிகர்களை ஏமாற்றமாட்டார்கள் என ஒரு நம்பிக்கை இருக்கு.மேலும் பல படங்களில் இணைந்து கலக்கல் இசையை வழங்குமாறு ரஹ்மான்&ஷாருக்கை கேட்டுக்கொண்டு அடுத்த பதிவில் சந்திக்கலாம் என்று கூறி டாட்டா பாய் பாய் சொல்லுறது

இடியட் இரோஷ்!!!!