16/12/2012

ரஹ்மானின் மீள்வருகை-கடல் பாடல்கள்



ஆரம்பகாலத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இசைவெளியீட்டு விழா என்று நடத்தி வெளியிடுவார்கள்.ஆனால் அண்மைக்காலத்தில் சிங்கிள் ட்ராக்ஸாக  வெளியிட்டு ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பை கூட்டி முற்றுமுழுதான பாடல்களை வெளியிடுவது என்று ஒரு சம்பிரதாயம் தமிழ் சினிமா இசையில் தோன்றியுள்ளது.அதை மிக அழகாகவும் வெற்றிகரமாகவும் ரஹ்மான்&மணிரத்னம் கூட்டணியினர் செய்து காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர்.இது ஒரு திரைப்படத்துக்கான ஒரு மறைமுக விளம்பரமாக இருப்பினும் இசைரசிகர்களுக்கு இவை கொண்டாட்டம் என்றே சொல்லாம். நெஞ்சுக்குள்ளே பாடல் ஆரம்பத்தில் வந்தது பின்னர் ஏலே கீச்சான் இப்போது பாடல்கள் அனைத்தும் வெளிவந்துவிட்டன.ஆனால் ஒவ்வொரு பாடல் வரும் போதும் கடல் திரைப்படம் மீதான எதிர்பார்ப்ப்பு உச்சத்துக்கு சென்றுவிட்டது.  மணிரத்னம் கடல் படத்துக்கான விளம்பரத்தை ஆஸ்கார் நாயகன் மூலம் அழகாக ஆரம்பித்துள்ளார்.ஒட்டு மொத்தமாக 7 பாடல்கள்வைரமுத்து,கார்க்கி தலா 3 பாடல்களும் ஈழத்தை சேர்ந்த தினேஷ் தனது ராப் பாடலையும் எழுதியுள்ளனர்.இந்த ஆல்பத்தில் ரஹ்மான் அனேகமாக புதிய பாடகர்களையே பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.ஹரிணீ,விஜய் ஜேசுதாஸ்,சின்மயி,ஹரிசரண் போன்றோரை தவிர மற்றய பாடகர்கள் அனைவரும் அனேகருக்கு பரிச்சயமில்லாத ரஹ்மானின் கண்ணில் தட்டுப்பட்ட திறமைசாலிகள்.ஏற்கனவே கடல் பாடல்கள் பற்றிய எதிர்வுகூறல்களை இசைப்புயலின் நெஞ்சுக்குள்ள-MTV UNPLUGGED-கடல் பாடல்கள்.......     பதிவில் பகிர்ந்திருந்தேன்.
னது பார்வையில் கடல் பாடல்கள் எப்படி இருக்கிறது மற்றும் புதிய பாடகர்கள் யார் யார் என்பது பற்றிய ஒரு பதிவே இது....


கடல் பாடல் இசை 




 சித்திரை நிலா

பாடியவர்-விஜய் ஜேசுதாஸ்


பாடல் வரிகள்-வைரமுத்து

விஜய் ஜேசுதாஸின் இசைபயணத்துக்கு ஒரு மகுடமான பாடல் எனலாம்.விஜய் ஜேசுதாஸ் ஏற்கனவே சிவாஜி  படத்தில் ரஹ்மான் இசையில் சஹானா பாடல் பாடியிருந்தாலும் படத்தில் விஜய் ஜேசுதாஸ்குரலில் இடம்பெறாததால் மிகவும் வருத்தமடைந்திருந்தார்.அதன் பின்னர் இந்த வாய்ப்பு விஜய் ஜேசுதாஸுக்கு நிச்சயம் திருப்தியளிக்ககூடியதாயிருக்கும். ரஹ்மான் இவ்வளவுநாளா ஏன் இப்பிடி பாட்டு கொடுக்கல்ல என்று கேட்க தோன்றும்  தாலாட்டும் பாடல்.ரஹ்மானின் தொண்ணூறு காலப்பகுதியில் வந்த மென்மையான பாடல்களில் உள்ள உயிர் இப்பாடலில் உள்ளது.இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த உருக்கமான பாடல்.வைரமுத்துவின் நம்பிக்கை ஊட்டும் வரிகள் அழகு.பாடலின் பின்னணியி வரும் வயலீன்,புல்லாங்குழல் மயக்கும்.மரமொன்று விழுந்தால் என்று வரும் கோரஸ் நிச்சயம் உணர்ர்சியை தூண்டும்.



. *****************************************************************************
மூங்கில் தோட்டம்

பாடியவர்கள்-அப்ஹே,ஹரினி

பாடல் வரிகள்-வைரமுத்து

அப்ஹே&நீதி மோகன்
புதியவர் அப்ஹே&ஹரினி குரலில்  இன்னுமொரு அழகான மெலோடி பாடல் அப்ஹே ஏற்கனவே ரஹ்மான் இசையில் கன்னட கோட்ஃபாதர் படத்தில் பாடலை பாடியுள்ளார்.


மேலும் கொஞ்சம் காஃபி கொஞ்சம் காதல் படத்தில்உயிர் உயிர் தோழாபாடலை சக்திசிறீகோபாலனுடன் பாடியுள்ளார்பாடலின் பின்னணியில் வரும் கிட்டார் ஸ்ரிங்ஸ் பியானோ, வயலீன் மென்மையாக தாலாட்டிசெல்லும்.ஹரிணி நீண்டகாலத்துக்கு பின்னர் ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.கொளத்தாங்கரையில குளிக்கும் பறவைகள் என்று தன்னோட ப்ரஷான குரலில் ஆரம்பிக்கும் போதும்இது போதும் எனக்கு இது போதுமேன்று உருகும் போது பாடலை உச்சத்துக்கு கொண்டுசொல்கிறார். பாடல் வரிகள் சொல்லவே தேவையில்லை வைரமுத்து அழகான காதல் பாடலை இயற்கையுடன் சொல்லியுள்ளார்.இந்த பாடலை கேட்கும் போது ரஹ்மானை பார்த்துஇது போதும் எனக்கு இது போதுமேஎன்று சொல்லத்தோன்றும் அவ்வளவு அழகான மெலோடி.இப்படிப்பட்ட பாடல்களுக்காக எவ்வளவு நாள் காத்திருந்தோம்.



*********************************************************************************

டியே

பாடியவர்-சிட் சிறீராம்.


பாடல் வரிகள்-கார்க்கி


சிட் சிறிராம்
"ஆரோமலே" என்ற அட்டகாசமான பாடலுக்கு பின்னர் மேலும் இன்னொரு புதிய முயற்சி.ஜாஸ் ஸ்டைலில் ஒரு கிராமிய பாடல்.கிராமத்து வாசம் வீசும் வரிகளுக்கு இப்படிப்பட்ட மெட்டும் இசையும் எதிர்பார்க்காதது.


பாடல் வரிகள் அட்டகாசமான கோர்வை
மதன் கார்க்கி ஒரு பாடலாசிரியராக தன் முதிர்ச்சியை காட்டியுள்ளார்.மிக வித்தியாசமாகவும் க்ரேஸியாகவும் உள்ளதுபாடகர் சிட் சிறீராம்  பாடல் முடியும் போது அல்போன்ஸ் ஜோசப்பை நினைவு படுத்துகிறார்.
இப்பாடலை பாடிய சிட் சிறீராம் பற்றி அனேகருக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.இவர் ஒரு பொப் பாடகர்  யு ரியுப்பில் இவரது பாடல்கள் மிக பிரபலம்......
 
************************************************************************************************************
அன்பின் வாசலே

பாடியவர்-ஹரிச்சரண்

பாடல் வரிகள்-கார்க்கி

காதல் படத்தில் “உனக்கென இருப்பேன்” என்று பாடி அனைவரையும் மயக்கிய ஹரிச்சரணின் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடலாக இது இருக்கும்.காரணம்  இசைபுயலின் இசையில் முதல் பாடல் இது.பாடல் முழுதும் அவ்வளவு உச்சத்ஸ்தாயியில் செல்கிறது.மிக சவாலான பாடல் அழகாக பாடியுள்ளார் ஹரிச்சரண்.பின்னணியில் வரும் கோரஸ்,PERCUSSION,வயலீன் ஓர்கெஸ்ரா புது உணர்வை தோற்றுவிக்கும்.மலரோடு மலரிங்கு மலர்ந்தாடும் போடு பாடலை கேட்கும் போது ஒரு இனம்புரியாத உணர்வு தோன்றும் அதே உணர்வு இப்பாடலிலும் ஏற்படும்.ஜேசுபிரானை வேண்டி பாடுவது போல அமைந்த பாடல்.கார்க்கி தன் வரிகளால் வைரமுத்துவின் பெயரை காப்பாற்றியுள்ளார்.


*********************************************************************************
ஏலே கீச்சான்

பாடியவர்-.ஆர்.ரஹ்மான்

பாடல் வரிகள்-கார்க்கி

துவும் ஏற்கனவே சிங்கிள் ட்ராக்காக வெளிவந்து ஹிட் ஆகியிருந்தது.வழமையாக ரஹ்மான் பாடும் பாடல்களில் ஒரு தனித்துவம் இருக்கும்.ரஹ்மானின் பாடும் ஸ்டைல் மிக அழகு. நீ விழுவேன்னு விளக்கொண்ண ஊத்திக்கிட்டு முழிச்சிருக்கன் நான் அரைக்கிறுக்கன் போன்ற மதன் கார்க்கியின் குறும்பான வரிகள் பாடலை இன்னொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது.


*********************************************************************************
நெஞ்சுக்குள்ள

பாடியவர்-சக்திசிறி கோபாலன்.


பாடல் வரிகள்-வைரமுத்து


ப்பாடல் ஏற்கனவே எம்.ரீவி UNLUGGED நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டு பின்னர் சிங்கிள் ட்ராக்கா வந்தது குறிப்பிடத்தக்கது.ஆல்பத்திலுள்ள பாடலில் இடையே ரஹ்மானின் குரல் வருவது இன்னும் பாடல் மீதான மயக்கத்தை கூட்டுகிறது.UNLUGGED  பாடலிலும் பார்க்க இதன் ஒரிஜினல் கேட்க மிக இதமாக உள்ளது.இப்பாடலே கடல்திரைப்பட பாடல்களில் அன்னேகருக்கு பிடித்த பாடலாக உருவாகியிருக்கிறது.


இப்பாடல் பற்றி ஏற்கனவே  பதிவு இட்டிருந்தேன் அதை வாசிக்க.

************************************************************************************************************

மகுடி மகுடி

பாடியவர்-ஆர்யன் தினேஷ் கனகரத்னம்,சின்மயீ,தன்வீ

பாடல்வரிக-ள்ஆர்யன் தினேஷ் கனகரத்னம்.

இந்தபாடல் ஈழத்து இசைக்கு ஒரு அங்கீகாரம் என்றே பெருமையுடன் சொல்லுவேன்ஈழத்தை சேர்ந்த தமிழ் ராப் இசைகலைஞர் ஆர்யன் தினேஷ் ரஹ்மான் இசையில் கலக்கியுள்ளார்.இது எம் போன்ற இசைரசிகர்களுக்கு எதிர்பாராத இசைவிருந்து. நம்மூர மறந்து போயி பட்டணம் ஓடிபோனா     
                                


என்று ஈழத்து ரசிகர்களை கொள்ளையடித்த தினேஷ் விஜய் ஆண்டனியின் அழைப்பில் தன்சுராங்கனி சுராங்கனிரீமிக்ஸ் பாடலைஆத்திசூடி ஆத்திச்சூடி என்று மாற்றி தமிழ் சினிமா இசைக்குள் தன் இருப்பை ஏற்படுத்தினார்.பின்னர் பல பாடல்களுக்கு தமிழ் ராப் செய்தார்.இறுதியாக சார்லஸ் பொஸ்கோவுடன் இணைந்து ”18 வயசு படத்துக்கு அழகான இசையை கொடுத்தார்.இன்று அண்மைக்கால ரஹ்மானின் தலைசிறந்த ஆல்பமான கடல் படத்துக்காக பாடல் என்று உச்சத்தை தொட்டு இருக்கிறார்.தினேஷ் போன்ற பல திறமையான இசைகலைஞர்கள் ஈழத்தில் உள்ளனர் அவர்களுக்கும் தினேஷ் ஏற்ப்படுத்திய தமிழ் ராப் இசை புரட்சி மிக ஊக்கத்தை அழைக்கும்.இத்தருணத்தில் ஒரு ஈழத்து இசைரசிகனாக தினேஷ் அண்ணாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.


மேலும் இப்பாடலின் இடையே நான் உன்ன நினைப்பேன்,நீ என்னை மறப்பா என்று சின்மயீ பேசும் வார்த்தைகளுக்கு ரஹ்மானின் இசை புது அர்த்தம் கொட்டுக்கிறது.இப்பாடல் UNEXPECTED PAKKAGE என்றே சொல்லலாம்.


ARYAN DINESH

***********************************************************************************************************

மொத்தத்தில் கடல் நீண்ட காலத்துக்கு பின்னர் ரஹ்மானின் அழகான மெலோடியை ஏற்றிவந்துள்ளது. நல்ல இசையை ரசிக்கும் அனைவரினது எதிர்பார்ப்பையும் 100% பூர்த்திசெய்திருக்கின்றன. அண்மைகாலமாக இளையாராஜாவினது இடைக்காலப்பாடல்களையும் ரஹ்மானின் ஆரம்பகால மெலோடிகளையும் கேட்டு என் இரவுகளை நிரப்புவேன்.ஆனால் கடல் பாடல்கள் வந்தபின் கதை வேறு.
சில சமயம் ரஹ்மானின் ஆரம்பகாலபாடல்கள் வந்தபோது எனக்கு நினைவு தெரியவில்லையே (1990/1999 காலப்பகுதியில் நான்  சிறுவன்) அந்த பாடல்களை ப்ரஷாக வெளியானவுடனே கேட்க முடியவில்லை என்று வருத்தப்படுவதுண்டு. ஆனால் இன்று கடல் பாடல்கள் அவை அனைத்தையும் நிறைவேற்றிவிட்டன.
இந்த தசாப்தத்தின் ரஹ்மானின் சிறந்த இசை இது என்னோடதும் அனைத்து இசைரசிகர்களினதும் கருத்து இது.பாடல்களில் ஈர்ப்பு பாடல்காட்சிகளின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.மணிரத்னம் இதுவரை ரஹ்மான் பாடலை காட்சியமைக்கும் விதத்தில் பிழை விட்டதில்லை.பொறுத்திருந்து பார்போம் திரையில் பாடல்கள் எப்படிவருகிறதென்று.
அடுத்தாக ரஹ்மானின் வெளியீடு வந்தே மாதரம் ஆல்பம் இயக்கிய ரஹ்மான் நண்பர் பரத்பாலாவின் தனுஷ்&சோனம் கபூர் நடிக்கும்மரியான்பாடல்கள்.

மீண்டும் சந்திப்போம் ரஹ்மானின் பாடல்களுடன்
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                இவன் இரோஷன்.