முன்னமெல்லாம் முதல்சோவுக்கு தியேட்டர் போறப்போ நல்ல படமா இருக்கும்னு எதிர்பார்த்துட்டு போவோம்.ஆனால் இப்பெல்லாம் அப்டி இல்லை.கட்டாயம் மொக்கை படமாதான் இருக்கும்னு நினைச்சிட்டு போக வைச்சுட்டாங்க கடசியா வந்த மிகப்பெரும் வராலாற்று மொக்கை படங்கள்.பெஸ்ட் ஷோ பாக்கல்லன்ன தெய்வக்குத்தமாகிடும் என்ற காரணத்துக்காகாவே நிறையா ஜீவன்கள் தியேட்டர்ல வர்ற படம் எல்லாம் பார்த்து படம் முடிந்து வரும்போது கடுப்புடன் திரும்புவது வழக்கமாக போய் விட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மாற்றன் பார்க்க ஒரு ஸ்பெசல் காரணம் இருக்கு அதான் நம்ம “காஜல்” கண்ணு.காஜலோட பருத்த..... ”கண்ணை” தியேட்டர்ல இன்னும் பெருசா பார்க்க போறம்ன நப்பாசை தான் அது(ஐ ஆம் எ குட் பாய் கூல்).
நம்ம பயலுவ “மாற்றான்” படத்தோட ட்ரெய்லர்,போஸ்டர் பார்த்தே சொல்லிட்டாங்க ஏதோ இங்கிலீஷ் பட காப்பி என்று.இப்ப யார் சார் இதெல்லாம் ஜோசிக்கிறது காப்பி அடிச்சாலும் பார்க்க கூடிய படம் வந்தா போதும் சாமி’ன்னு ஆயிடிச்சு இப்போதைய தமிழ் சினிமா நிலமை.நானும் அதே ரகமாயிட்டன்.இதுகெல்லாம் “சகுனி”,”பில்லா 2”, ”முகமூடி”, ”தாண்டவம்” போன்ற மரணமொக்கைகளே காரணம்.சரி நாலோட அஞ்சா போகட்டும்’ன்னு படத்த பார்த்து முடிச்சுட்டன்.கடசியா வந்த எல்லாப் படங்களுக்கும் விமர்சனம் எழுதலாம்னு ஜோசிச்சுட்டு மனம் இல்லாம விட்டுருவேன்.எழுத ஒன்னும் இல்லை என்பதே காரணம்.(முகமூடி நண்பர் கேட்டதுக்காக வலைதளம் ஒன்றிற்கு எழுதினேன்).
வந்த படங்கள பத்தி யார் கேட்டாலும் மொக்கை படம்டா பாக்காத’னு சொல்லியே வாய் வலிச்சதால இந்த முறை கொஞ்சம் வித்யாசமா படத்தில இருக்கிற நல்ல மாட்டர்கள் பத்தி மட்டும் சொல்லலாம்னு ஜோசிச்சன்.
(இந்த பதிவு விமர்சனம் அல்ல)அதுக்கு முன்னம் என் பார்வையில் மாற்றான் எப்டின்னு ஒரு வரியில் சொல்றன்.
”நாம போற ரோட்ல நாலு,அஞ்சு மொக்கை பிகருகள் ஒவ்வொரு நாளும் காணுறம்’னு வைங்களேன்.திடீர்னு ஒரு நாள் அந்த ரோட்டால ஒரு சுமாரான பிகர் க்ராஸ் ஆகிறப்போ ஒரு பீல் வருமே அந்த பீல் தான் மாற்றான் பார்த்து முடிஞ்சு வர்ரப்போ இருந்துச்சு”
(இந்த டயலக்கின் உரிமை என் நண்பன் லவன்’இற்கே சேரும்..)
மாற்றான் கதையில் சிக்கல் இல்லை எனினும் எடுத்துக்கொண்ட கதாபாத்திரம் சிக்கலானது.ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள்.
ஒரு இதயத்தில் இயங்கும் இரு உடல்கள்.படத்தோட இண்டர்வெல் மட்டும் இரண்டு சூர்யாவும் ஒன்றாகவே இருப்பார்கள். அது வரைக்கும் இரண்டு பாடல்கள்,நீண்ட சண்டைக்காட்சிகள்,காமடி சீன்கள்,லவ் சீன்கள் என்பவற்றை ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களை வைத்து பிரம்மாண்டமாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்கள் (இண்டர்வலுக்கு முன்னய சீன்களை பற்றியே கதைத்துகொண்டு இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்). மாற்றான் குழுவினர் இதற்காக நிறைய உழைத்து இருக்கிறார்கள் .அதற்கு ஒரு சபாஷ்.
ஒட்டிப்பிறந்த ரெட்டையராக இருந்தாலும் ரெண்டு பேரின் குணாதிசயங்களும் வித்யாசமானவையாக காட்டுகிறார்கள்.ஒரு சூர்யா கம்யூனிஸ்ட் ஆகவும், மற்ற சூர்யா எதை பற்றியும் கவலைப்படாத நாகரிக இளைஞனாகவும் ஒன்றாகவே வலம் வருகிறார்கள்.இந்த பாத்திரங்கள் இரண்டையும் வேறு வேறான பாடி லாங்க்வேஜ்ஜில் நடிக்கவேண்டிய கட்டாயம் சூர்யாவுக்கு.அதை கச்சிதமாக செய்து இருக்கிறார்.இயக்குனருக்கு பூரண ஒத்துழைப்பையும் உழைப்பையும் கொட்டி இருக்கிறார் என்றே சொல்லலாம்.தலைமுடி ஸ்டைல்,உடல் வாகு,முக பாவனை,பேசும் விதம் என்பவற்றில் வித்யாசங்களை தெளிவாக காட்டி விமலனாகவும் அகிலனாகவும் கலக்கி இருக்கிறார் சூர்யா.ஓட்டிப்பிறந்த ரெட்டையர்கள் எனினும் இயக்குனர் இருவரையும் கதாபாத்திரவடிவமைப்பு மூலம் பிரித்து தனித்தனியே நடமாடவிட்டிருக்கிறார்.
இந்த பாத்திர படைப்பின் வெளியீட்டுக்கு இயக்குனர்,சூர்யாவை விட முக்கியமானவர்கள் கமரா மானும்,எடிட்டரும்.அவர்கள் சரியாக உழைப்பை கொட்டி இருக்காவிடில் “ரெட்டை கதிர்” பதராகியிருக்கும்.இரண்டு சூர்யாவும்சேர்ந்து காஜலுடன் ஆடும் “தீயே தீயே” பாடலில் தொழிநுட்பம் பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளது.சொல்லப்போனால் அந்த பாடலை வழமையான கிளப் சாங் போல பண்ணமுடியாது ஏனெனில் இரண்டு சூர்யாவும் பாடலில் வரவேண்டும்.அதுவும்தோழின்மேல் கை போட்டவாறு. ஒரு பாடலை எடுப்பதின் இரண்டு மடங்கு நேரம் செலவளிக்க நேர்ந்திருக்கும். தனித்தனியே சூர்யாவின் சீன்களை எடுத்து எடிட் செய்யும் போது கமராமானின் லைட்னிங் ஒரே அளவாக இருக்கவேண்டும் இல்லையேல் மொக்கையாகிவிடும்.ஆனால் அந்த பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறும் விதமாக எடிட்டர் ஆண்டனியும் கமராமனும் சிறப்பாக பங்காற்றியுள்ளார்கள். அந்த பாடலுக்கு பங்காற்றிய அனைத்து கலைஞர்களும் நிறைவாக உழைத்து இருக்கிறார்கள். .
அடுத்தது இண்டர்வலுக்கு முன்னர்வரும் பிரமாண்டமான சண்டைக்காட்சி.
சேர்கஸ்’இல் இருந்து ரெட்டையர்களும் ஒன்றாக வில்லன்களுடன் சண்டை போடுவது போல் இடம்பெற்ற காட்சியில் எடிட்டர் ஆண்டனியே தெரிகிறார். மேலும் சண்டைபயிற்சி இயக்குனரும் உழைத்து இருக்கிறார்.படத்தின் ரெண்டாம் பாதிக்கான எதிர்ப்பார்பை கூட்டியது இந்த சண்டைக்காட்சியும் அதன் பின்னரான காட்சியுமே ஆகும்.இரண்டு சூர்யாவில் ஒரு சூர்யா இறக்கும் போது எழுந்து நடக்கமுடியாமல் அரைந்து அரைந்து மற்றய சூர்யா செல்லும் போது நடிப்பில் உருகவைக்கிறார்.இண்டர்வல் மட்டும் படம் செம்ம ஸ்பீட்(அதுக்கப்புறம் என்ன நடந்திச்சுன்னு கேக்காதீங்க சொல்லவும் மாட்டன்.)
மேலும் ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள் எப்டி சேர்ட் போடுவாங்க என்பதை ரசிகர்கள் கேட்கமுன்பே அழகாக காட்டி இருப்பது நிறைவு.மேலும் “நம்மளுக்கு ப்லாட் மட்டும் தான் COMMON மத்ததெல்லாம் வேற வேற”(உணர்வுகள்).என்ற டயலக் மூலமே நம் சந்தேகங்களுக்கு சாதுரியமாக பதில் அளிக்கிறார் இயக்குனர்.மேலும் “இவங்கள் ஆடித்தள்ளு படிலயா புடிச்சா ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசமா” என்று போலீஸ்காரி கேட்டபின் தொடரும் காட்சிகள் கலகல.மேலும் அப்பாவி சூர்யாவுக்கு காஜலை முத்தமிட சொல்லி மற்ற சூர்யா சொல்ல தடுமாறும் இடங்கள் ரசிக்கவைக்கும்.ரெண்டு சூர்யாவும் தமக்கிடையே சண்டையிடும் காட்சி உணர்ச்சியூட்டும்(சோகம்).அதன் பின் “HEARTLESS FELLOW" என்று இதயம் உள்ள சூர்யா மற்றசூர்யாவை திட்டும் இடம் டச்சிங்.
அடுத்தது காஜல்.இப்போதைக்கு இளைஞர்கள் அடிக்கடி உச்சரிக்கும் அல்லது பேஸ்புக்கில் அனேகர் SHARE செய்யும் பெயர் ஒன்று காஜல்,மற்றயது சமந்தா.இருப்பினும் மாற்றான் மூலம் சமந்தாவை முந்தி SHARE'களை கூட்டி உள்ளார் காஜல்.அழகான பெரிய கோலிகுண்டு(ழ இல்லை ல) கண்ணோடு ரெண்டு சூர்யாவையும் லவ்விக்கொண்டும் உக்ரேனியா மொழியைட்ரன்சிலேட் பண்ணிட்டும்(என்ன கொடுமைன்ன இந்த பொண்ணுக்கே நம்ம சின்மயீ தான் ட்ரான்சிலேசன் அதாங்க டப்பிங் இந்த லட்சணத்ல படத்ல காஜலை வேற்றுமொழி ட்ரான்சிலேட்டராக காட்டுறத ஜோசிச்சா கொஞ்சம் சிரிப்பு வரும்)அழகழகா ட்ரெஸ் போட்டுட்டும் நம் கண்களுக்கு தீனி போடுகிறார். எந்த உடையிலும் அழகாக பளீச் என்று தெரிகிறார்.காஜல பத்திசொல்லிட்டே போலாமுங்க அப்புறம் கான்சப்ட் மாறிடும்.இத்தோட காஜல் புராணத்தை. முடிச்சுக்கிறன்.
இசை ஹாரீஸ்.சொல்லவே தேவையில்லை பாடல்கள் நானிகோனி, கால் முழைத்த பூவே ரெண்டும்செம்ம ஹிட்.காப்பியோ என்ன கண்றாவியோ ”யாரோ யாரோ” பாடலை தவிர மற்றயவை கேட்கக்கூடிய ரகம்.பின்னணி இசைபற்றி சொல்லவிரும்பல்ல.அடுத்ததாக பாடல்காட்சிகள் அமைத்த விதம் வழமைபோல் கே.வீ.ஆனந்த் குழுவினர் கலக்கி இருக்கிறார்கள். ”நானிகோனி” என்ற பாடல் அழகோ அழகு.கலர் ரோன் செம்மை.மற்றைய பாடல்களும் அழகாக காட்சி அமைப்பு.
எக்ஸ்ட்ரா FUN பிட்- ஒரு சூர்யா விஜய் ஃபானாகவும் மற்றயவர் அஜித் ஃபானாகவும் காட்டப்படுகின்றனர்.படத்தில் விஜய் ஃபான் சூர்யா பரிதாபமாக இறக்கிறார்(இதை தான் "DIE"HARD FAN என்பார்களோ)இதன் மூலம் சமுகத்துக்கு நல்ல ஒரு மேசேஜ்ஜை இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.(இப்படியும் கொல்லலாம் #விஜய் ).
ஓகே மக்கள்ஸ் வேற இன்னாத்த சொல்ல.இவைதான் மாற்றான்ல குறிப்பிட்டு பாராட்டவேண்டிய விசயங்கள்.திட்டவேண்டிய விசயங்கள் இல்லையான்னு கேக்காதீங்க.அப்புறம் திட்டிவேற ஒரு பதிவு எழுதிடுவன்.
பீ கேர் ஃபுல்.மற்றயவை எப்டின்னு தியேட்டர்ல போய் படத்த பார்த்து/பார்த்திருந்தா எனக்கு சொல்லுங்க.வேற என்னன்னா கமரா லைட்னிங்’னெல்லாம் பேசுறானே என்ன தெரியும் இவனுக்கு’னு ஜோசிச்சு இருப்பீங்க.அத தான் நானும் சொல்லுறன்.உங்களுக்கு இதில் என்ன பிழைதெரிஞ்சாலும்.உங்களுக்கு ஏதும் தெரிஞ்சாலும் பகிருங்கள்.
அப்புறம் முக்கியமான ஒரு மாட்டர் சொல்ல மறந்துட்டன் “நான் சூர்யா ஃபான் இல்லீங்க”
இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.
டேக் கேர் சொல்றது உங்க நண்பன்
இடியட் இரோஷ்!!!