நடிகர்கள்-சிவகார்த்திகேயன்,ப்ரியா ஆனந்த்,நந்திதா,சதீஷ்,ஜெயபிரகாஷ்
இசை-அனிருத்
ஒளிப்பதிவு-வேல்ராஜ்
எடிட்டிங்-கிஷோர்
எழுதி இயக்கியவர்-துரை செந்தில்குமார்
தயாரிப்பு-தனுஷ்
சுமாரான கதையும் சிவகார்த்திகேயனினதும் பரோட்டா சூரியினதும் சரவெடிகள் ஆங்காங்கே இருந்ததாலும் வெற்றிக்கொடியை நாட்டிய
கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கு பின்னர் சிவகார்த்திகேயன் சோலோ ஹீரோவாக நடித்துவெளிவந்திருக்கும் படம் எதிர்நீச்சல்.
சிவகார்த்திகேயனின் பாட்டி வைத்த குஞ்சிதபாதம் என்ற பெயரால் தன் வாழ்கையில் அனேக சந்தர்ப்பங்களில் அசிங்கப்படும் சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரீஷ் என்று மாற்றிக்கொள்கிறார்.அதன் பின் அவர் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் எதிர்நீச்சல்.சின்ன சின்ன விசயங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
இந்த ஒன்லைனை வைத்து ரசிக்கவைக்கும் காமடி,செண்டிமண்ட்,கொஞ்சம் அலட்டல்கள்,கலக்கலான பாடல்களுடன் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குமர் துரை செந்தில்குமார்.
சிவகார்த்திகேயன்.
குஞ்சிதபாதம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அவஸ்தை படுவதாக இருக்கட்டும்,ஓனரின் குண்டுப்பையனை வைத்து ப்ரியா ஆனந்தை லவ்வுவதாக இருக்கட்டும் முற்பாதியில் காமடியில் அசத்துகிறார்.பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி, பாடிலாங்குவேஜ்,காஷ்டியூம்ஸ் எல்லாவற்றிலும் கொஞ்சூண்டு ரிச் லுக் தெரிகிறது.இப்படியே போனால் அடுத்த படத்தில் சீ.பீ,ஐ ஆபீசராகவும் நடிக்கலாம் இவர்.ஆனால் பிற்பாதியில் ஓட்டவீரனாக ஸ்கோர் செய்யவேண்டிய இடங்களில் கொஞ்சம் சொதப்பிவிட்டாரோ என எண்ணத்தோன்றியது.அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக ஒரு ஓட்டவீரனின் பாடிலாங்குவேஜ்ஜை ஸ்ரடி பண்ணியிருக்கலாம்.அனிருத்.
இந்த
படத்தோட இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம்.ஐந்து,ஆறு மாதங்களுக்கு முன்னரே
பாடல்கள் வந்து பாக் டூ பாக் ரேடியோக்களில் ஒலித்து இப்படத்துக்கு நல்ல ஒரு
பப்லிசிட்டியை கொடுத்திருந்தது. “வெளிச்சப்பூவே” மெலோடியாக இருக்கட்டும்
“பூமி என்ன சுத்துதே” ,”ஸ்பீடு ஸ்பீடு” ,”நிஜமெல்லாம்
மறந்துபோச்சு”,பாடல்கள் எல்லாமே கலக்கல். அதிலும் வெளிச்சப்பூவே பாடல்
அவ்ளோ அழகாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.அனிருத்தும் ஒரு காட்சியில்
தோன்றுகிறார்.
”லோக்கல் பாய்ஸ்” பாடல் வலிந்து திணிக்கப்பட்டு இருப்பினும் தனுஷ்,சிவா,நயந்தாரா என்று குத்தாட்டத்தில் பின்னிபெடலெடுத்திருந்தனர்.
பின்னணி
இசையில் ஒரு முதிர்ச்சியான ஒரு இசையமைப்பாளர் போல
செயற்பட்டுள்ளார்.இனிவரும் காலங்களிலும் பின்னணி இசையில் கவனம்
செலுத்தினால் நல்ல எதிர்காலம் இருக்கு.
ப்ரியா ஆனந்த்&நந்திதா.
முற்பாதியில் ரீச்சராக சிவகார்த்திகேயனின் வெளிச்சப்பூவாக விதவிதமான சாறிகள் அணிந்து மனசில் ஒட்டிக்கொள்கிறார் ப்ரியா ஆனந்த்.
அதிலும் வெளிச்சப்பூவே பாட்டில் பொண்ணு அப்டி ஸ்கோர் செய்திருக்கு.
180 படத்திற்கு பிறகு நேரடி தமிழில் ப்ரியா ஆனந்துக்கு நல்ல ஒரு ஸ்கோப் எதிர்நீச்சல் மூலம் கிடைக்கவாய்ப்புண்டு. பிற்பாதியில் வழமையான ஹீரோயின்கள் செய்வது போல ரெண்டு சீன்களில் தலைகாட்டுகிறார்.
பணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாகவும், சிவகார்த்திகேயனுக்கு கோச்சாகவும் பிற்பாதியில் முழுக்க வருகிறார் நந்திதா.அட்டகத்தி படத்துக்கு பின்னர் நல்ல ஒரு கரக்டர் அளவான நடிப்பைகொடுத்திருக்கிறார்.
வேற என்ன....???
சிவாவின் நண்பனாக வரும் சதீஷ் கிடைக்கும் காட்சிகளிலெல்லாம் பின்னியிருக்கிறார்.அதிலும் குறிப்பாக மதன் பாப்பை கலாய்க்கும் காட்சிகள் அருமை.சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களிலும் ஒரு காமடி ட்ரெண்டை உருவாக்கலாம்.மனோபாலா ஒரு காட்சியில் வந்தாலும் வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறார்.அதுவும் கேசவன் என்ற பெயர் K7 ஆயிருப்பதால் K9(கேனையன்) ஆக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்று பீலா விடுவது அதன் பின்னர் வரும் சீனும் கலக்கல்.சிவாவை ஆரம்பத்திலே ஒரு மரதனோட்ட வீரனாக காட்டுவது பிற்பாதி லாஜிக்கிற்கு கொஞ்சம் உதவியிருக்கிறது.இவற்றைவிட அண்மையில் வைத்திய பரிசோதனையில் ஆண் என நிருபிக்கப்பட்டு பதக்கங்கள் பறிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை பிங்கி பற்றி ஒரு செய்தி படித்திருப்போம். இந்த ஒரு வரிச்செய்தியை கொஞ்சம் மாற்றியமைத்து நந்திதாவின் கரக்டரை உருவாக்கிய இயக்குனருக்கு சபாஷ்.
இன்றைய இளைஞர்கள் தமக்கு தம் பெற்றோர்கள் வைக்கும் பெயரை ஆங்கில கலப்புடனும்,ஸ்டைல் என்ற பெயரில் வேற்றுமொழிகளையும் கலந்து பெயர் மாற்றம் செய்வது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த பேஸ்புக்கில் இது போன்ற கண்றாவிகளை காணலாம்.
ஆனால் நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் என்பது நம் சந்ததியின் அடையாளம் என்றும் பெயர் மாற்றுவதை விட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்னும் அழகான சமுகக்கருத்தை நகைச்சுவை, செண்டிமண்ட் கலந்து சொன்னதற்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.
இப்படி பிளஸ்கள் இருந்தும் பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது.
அனைத்தும் ஏற்கனவே சலிப்பூட்டிய ஊக்கிக்ககூடிய காட்சிகளாக கோர்க்கப்பட்டுள்ளது.சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என தோன்றுவதை தடுக்கமுடியவில்லை.
அந்த கிளைமாக்ஸ் 10 நிமிடகாட்சிகள் எப்படியோ படத்தை முடிக்கவேண்டும் எனும் நோக்கில் செயற்கை தனமாக நகர்கின்றன. சிவாவை மரதன் ஓட்டப்பந்தய வீரனாக ஜீரணிக்கமுடியவில்லை. அப்படியொரு செயற்கைதனம்.நந்திதாவின் கோச்சாக வரும் ஜெயபிரகாஷ்,பணக்கார கோச்சாகவரும் ரவி பிரகாஷ் வழமையாக படங்களில் பார்த்து சலித்த கரக்டர்கள்.ஜெயபிரகாஷ் போன்ற ஒரு திறமையான நடிகர் இவ்வாறான கரக்டர்களை தவிர்க்கலாம்.முற்பாதியில் திடீரென்று தான் ஏதும் சாதிக்கவேண்டும் என்று கண்சிவந்து சிவா கிளம்புவது பிற்பாதிக்கான வழியாக இருப்பினும் ஒட்டவில்லை.இவற்றை கொஞ்சம் சரி செய்திருந்தால் எதிர்நீச்சலை மொத்தமாக இன்னும் கொண்டாடியிருக்கலாம். இருப்பினும் இயக்குனர் எதிர்நீச்சல் மூலம் சிவகார்த்திகேயனை வெற்றிகரமான சோலோ ஹீரோவாக ஒரு படி மேல் கொண்டு வைத்திருக்கிறார்.
இவன் இரோஷன்.