
முன்னமெல்லாம் முதல்சோவுக்கு தியேட்டர் போறப்போ நல்ல படமா இருக்கும்னு எதிர்பார்த்துட்டு போவோம்.ஆனால் இப்பெல்லாம் அப்டி இல்லை.கட்டாயம் மொக்கை படமாதான் இருக்கும்னு நினைச்சிட்டு போக வைச்சுட்டாங்க கடசியா வந்த மிகப்பெரும் வராலாற்று மொக்கை படங்கள்.பெஸ்ட் ஷோ பாக்கல்லன்ன தெய்வக்குத்தமாகிடும் என்ற காரணத்துக்காகாவே நிறையா ஜீவன்கள் தியேட்டர்ல வர்ற படம் எல்லாம் பார்த்து படம் முடிந்து வரும்போது கடுப்புடன் திரும்புவது வழக்கமாக போய் விட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மாற்றன் பார்க்க ஒரு ஸ்பெசல் காரணம் இருக்கு அதான் நம்ம “காஜல்” கண்ணு.காஜலோட பருத்த..... ”கண்ணை” தியேட்டர்ல இன்னும் பெருசா பார்க்க போறம்ன நப்பாசை தான் அது(ஐ ஆம் எ குட் பாய் கூல்).
நம்ம பயலுவ “மாற்றான்” படத்தோட ட்ரெய்லர்,போஸ்டர் பார்த்தே சொல்லிட்டாங்க ஏதோ இங்கிலீஷ் பட காப்பி என்று.இப்ப யார் சார் இதெல்லாம் ஜோசிக்கிறது காப்பி அடிச்சாலும் பார்க்க கூடிய படம் வந்தா போதும் சாமி’ன்னு ஆயிடிச்சு இப்போதைய தமிழ் சினிமா நிலமை.நானும் அதே ரகமாயிட்டன்.இதுகெல்லாம் “சகுனி”,”பில்லா 2”, ”முகமூடி”, ”தாண்டவம்” போன்ற மரணமொக்கைகளே காரணம்.சரி நாலோட அஞ்சா போகட்டும்’ன்னு படத்த பார்த்து முடிச்சுட்டன்.கடசியா வந்த எல்லாப் படங்களுக்கும் விமர்சனம் எழுதலாம்னு ஜோசிச்சுட்டு மனம் இல்லாம விட்டுருவேன்.எழுத ஒன்னும் இல்லை என்பதே காரணம்.(முகமூடி நண்பர் கேட்டதுக்காக வலைதளம் ஒன்றிற்கு எழுதினேன்).
வந்த படங்கள பத்தி யார் கேட்டாலும் மொக்கை படம்டா பாக்காத’னு சொல்லியே வாய் வலிச்சதால இந்த முறை கொஞ்சம் வித்யாசமா படத்தில இருக்கிற நல்ல மாட்டர்கள் பத்தி மட்டும் சொல்லலாம்னு ஜோசிச்சன்.
(இந்த பதிவு விமர்சனம் அல்ல)அதுக்கு முன்னம் என் பார்வையில் மாற்றான் எப்டின்னு ஒரு வரியில் சொல்றன்.
”நாம போற ரோட்ல நாலு,அஞ்சு மொக்கை பிகருகள் ஒவ்வொரு நாளும் காணுறம்’னு வைங்களேன்.திடீர்னு ஒரு நாள் அந்த ரோட்டால ஒரு சுமாரான பிகர் க்ராஸ் ஆகிறப்போ ஒரு பீல் வருமே அந்த பீல் தான் மாற்றான் பார்த்து முடிஞ்சு வர்ரப்போ இருந்துச்சு”
(இந்த டயலக்கின் உரிமை என் நண்பன் லவன்’இற்கே சேரும்..)
மாற்றான் கதையில் சிக்கல் இல்லை எனினும் எடுத்துக்கொண்ட கதாபாத்திரம் சிக்கலானது.ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள்.

ஒரு இதயத்தில் இயங்கும் இரு உடல்கள்.படத்தோட இண்டர்வெல் மட்டும் இரண்டு சூர்யாவும் ஒன்றாகவே இருப்பார்கள். அது வரைக்கும் இரண்டு பாடல்கள்,நீண்ட சண்டைக்காட்சிகள்,காமடி சீன்கள்,லவ் சீன்கள் என்பவற்றை ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களை வைத்து பிரம்மாண்டமாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்கள் (இண்டர்வலுக்கு முன்னய சீன்களை பற்றியே கதைத்துகொண்டு இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்). மாற்றான் குழுவினர் இதற்காக நிறைய உழைத்து இருக்கிறார்கள் .அதற்கு ஒரு சபாஷ்.